Serial Trp Rating List: சீரியல்கள் மூலம் மக்களை என்டர்டைன்மென்ட் பண்ணும் விதமாக சில தொலைக்காட்சி நிறுவனங்கள் எக்கச்சக்கமான சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். இதில் எந்த சீரியல்கள் மக்களை கவர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்று இருக்கிறது என்பதை ஒவ்வொரு வாரமும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் எந்த சீரியல்கள் முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கிறது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
சிங்க பெண்ணே: ஆனந்தியின் கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பது தெரியாமல் அதை கண்டுபிடிப்பதற்கு ஆனந்தி மற்றும் தோழிகள் சேர்ந்து போராடுகிறார்கள். இவர்கள் யார் என்று கண்டுபிடித்தால் நம் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் மித்ரா ஆதரத்தை ஒவ்வொன்றாக அழித்துக் கொண்டு வருகிறார்.
இதற்கிடையில் ஆனந்தியின் நடவடிக்கைகளை பார்த்து எரிச்சல் படும் யாழினி கொஞ்சம் கொஞ்சமாக ஆனந்தியை வெறுத்து வருகிறார். அதற்கு ஏற்ற மாதிரி அன்புவின் அம்மா ஏற்பாடு பண்ணும் பூஜையில் ஆனந்தி கலந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்தி விட்டார். இப்படி பல சிக்கல்களை தாண்டி வரும் இந்த சீரியல் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.72 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது.
மூன்று முடிச்சு: தனக்கென்று ஒரு வேலை வேண்டும் என்று முடிவு பண்ணிய நந்தினி, சூர்யாவின் சப்போட்டில் உணவு பிசினஸ் ஆரம்பித்திருக்கிறார். இது பிடிக்காத சுந்தரவல்லி நந்தினியை வீட்டுக்குள் விடாமல் வெளியே நிப்பாட்டி அப்படியே அனுப்பி விட வேண்டும் என்று பிளான் பண்ணி விட்டார். ஆனால் சூர்யா இருக்கும் வரை நந்தினிக்கு எந்த பிரச்சனையும் வரவிடமாட்டார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.23 புள்ளிகளை பற்றி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
கயல்: இந்த சீரியல்களுக்கு தொடர்ந்து நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் பிரைம் டைமிங் ஒளிபரப்பாகி வருவதால் இந்த வாரம் 8.12 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஆனால் தற்போது புதுசாக கயலுக்கு வீட்டில் இருக்கும் அண்ணியை வில்லியாக மாறி வருகிறார். மேலும் இந்த சீரியலின் டைமிங் மாறுவதால் இனி டிஆர்பி ரேட்டிங்கில் வருவது கஷ்டம்தான்.
மருமகள்: பிரபுவிடம் போலீஸ் வந்து சொல்லப்போகும் உண்மையால் என்ன நடக்கப் போகும் என்ற பயத்தில் ஆதிரை இருக்கிறார். பிரபுவிடம் இருந்து உண்மையை மறைத்த ஆதிரை இந்த முறை நிச்சயம் பிரபுவிடம் மாட்டிக் கொள்ளப் போகிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 7.31 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.
சிறகடிக்கும் ஆசை: ரோகினி பணக்கார வீட்டு பெண்ணே இல்லை என்று தெரிந்த பிறகும் ரோகிணி, மீனா மற்றும் ஸ்ருதி அதிகாரம் பண்ணி தான் வருகிறார். விஜயாவும் பெரிதாக கண்டித்ததாகவும் இல்லை. போதாததற்கு முத்துவை பழிவாங்க சிட்டியுடன் கைகோர்த்து ரோகினி சிக்க வைத்து விட்டார். முத்துவும் ஓவர் தெனாவட்டில் தேவையில்லாத பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டுங்கில் 7.22 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.