டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 5 இடத்தை பிடித்த சீரியல்கள்.. விஜய் டிவியிடம் தோற்றுப் போன சன் டிவி சீரியல்

Serial Trp rating List: சன் டிவி மற்றும் விஜய் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்களை என்டர்டைன்மென்ட் பண்ணும் விதமாக எக்கச்சக்கமான சீரியல்களை கொண்டு வருகிறார்கள்.

இதில் எந்த சீரியல்கள் மக்களை அதிகம் கவர்ந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு வாரமும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் வெளிவந்த டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பிடித்த சீரியல்கள் என்னவென்று பார்க்கலாம்.

கொஞ்சம் கொஞ்சமாக சன் டிவி சீரியலை தோற்கடிக்கும் விதமாக விஜய் டிவி சீரியல் முன்னேறிக்கொண்டே வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் சிங்க பெண்ணே சீரியல் 9.36 புள்ளிகளை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.

இரண்டாவது இடத்தில் மூன்று முடிச்சு சீரியல் 8.92 புள்ளிகளை பெற்றிருக்கிறது. மூன்றாவது இடத்தில் கயல் சீரியல் 8.32 புள்ளிகளை பெற்றிருக்கிறது. அடுத்ததாக 7.78 புள்ளிகளை பெற்று சிறகடிக்கும் ஆசை சீரியல் நான்காவது இடத்திலும், மருமகள் 7.32 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்திலும் இருக்கிறது.

இன்னும் ஒரு சில வாரங்களில் ஐந்தாவது இடத்திற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் இடம் பிடித்து விடும். அந்த அளவிற்கு இப்போது அய்யனார் துணை சீரியல் உணர்ச்சிபூர்வமாக மக்களை கவர்ந்து வருகிறது

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →