Anna Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற அண்ணா சீரியலில், இசக்கிய புரிந்து கொள்ளாமல் சண்முகம் தங்கை மீது கோபப்பட்டார். அதன் பிறகு பரணி, இசக்கி வீட்டை விட்டு போனதற்கான காரணத்தை சொல்லி பாக்கியத்துடன் பாசமாக சண்முகம் இருக்கும்படி செய்தார். அத்துடன் அத்தை ஆசைப்பட்ட மாதிரி இசக்கிக்கு வளைகாப்பு நடத்துவதற்கு ஏற்பாடுகளையும் பண்ணினார்.
ஆனால் அதிலும் பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக இசக்கியின் வளைகாப்பில் ஏகப்பட்ட சிக்கல்கள் வந்தது. இதனால் பரணி கோபப்பட்டு வீட்டை விட்டு கிளம்பும் சூழ்நிலை வந்த பொழுது சண்முகம் நான் எது செஞ்சாலும் சரியாக இருக்கும். அதற்கு ஒரு காரணம் இருக்கும் என்று உன்னால் புரிந்து கொள்ள முடியாதா? எதற்காக இசக்கி ஒரு காரணத்துடன் வீட்டை விட்டு போனாலோ, அதே மாதிரி நான் வராமல் இருந்ததற்கு ஒரு காரணம் உண்டு.
அதை நீ புரிந்து கொண்டால் வீட்டுக்குள் வா என்று சொன்னதும் பரணியும் சண்முகம் பேச்சுக்கு கட்டுப்பட்டு வீட்டுக்குள் போய்விட்டார். ஆனால் பரணி அந்த வீட்டிற்கு வாக்கப்பட்டதிலிருந்து அந்த குடும்பத்தை காக்கும் ஒரு காவல் தெய்வமாகத்தான் எல்லா விஷயத்தையும் கவனமாக பார்த்து வருகிறார். தங்கைகளுக்கு அண்ணன் எந்த அளவுக்கு பாசத்தை காட்டுகிறானோ, அதே மாதிரி பரணியும் எல்லோருடைய நல்லதை பார்த்து செய்து வருகிறார்.
இதனை தொடர்ந்து வைஜெயந்திக்கு சண்முகத்தை பழி தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வீட்டை விட்டு கோபப்பட்டு போன வைகுண்டத்தை பழி வாங்குவதற்கு முயற்சி செய்து விட்டார். அந்த வகையில் ரத்னா போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் பொழுது வைகுண்டத்தை தூக்கில் போடுவதற்கு தயாராகி விட்டார். இந்த விஷயம் சூடாமணி மூலம் சண்முகத்திற்கு தெரிய வந்த நிலையில் அப்பாவை ஒரு வழியாக காப்பாற்றி கூட்டி வந்து விட்டார்.
ஆனாலும் இதற்கு காரணம் வைஜெயந்தி தான் என்று சண்முகத்திற்கு தெரிய வந்த நிலையில் அதற்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக ஆக்ரோஷமாக மாறிவிட்டார். இருந்தாலும் சண்முகத்தின் கோபத்தை குறைக்கும் விதமாக பரணி கண்ட்ரோல் பண்ணி வைஜெயந்தியின் ஆணவத்தை அடக்குவதற்கு உறுதுணையாக இருப்பார்.