ஒவ்வொரு நாளும் பயங்கர சுவாரஸ்யத்தோடு சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இரண்டு வாரங்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. அந்த வகையில் இந்த வாரம் முதல் ஆளாக சாந்தி மாஸ்டர் பிக்பாஸ் வீட்டை விட்டு குறைந்த ஓட்டுகளை பெற்று வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
ஆரம்பத்தில் இவர் மகேஸ்வரி உடன் சண்டையிட்டு வந்தது சுவாரஸ்யத்தை ஏற்படுத்திய நிலையில் இவர் பிக் பாஸ் வீட்டில் அதிக நாட்கள் இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் போகப் போக இவர் வீட்டில் இருக்கிறாரா என்ற சந்தேகம் தான் அனைவருக்கும் வந்தது. அந்த அளவுக்கு இவருடைய இருப்பு பிக் பாஸ் வீட்டில் பெரிய அளவு சுவாரசியத்தை ஏற்படுத்தவில்லை.
அதனாலேயே இவருக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தது. இருப்பினும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கும் இவருக்கு இந்த இரண்டு வாரங்களில் நல்ல சம்பளமே கிடைத்துள்ளது. அதாவது ரசிகர்கள் ஆதரவை பெற்று பிரபலமாக இருந்த ஜி பி முத்துவை விட இவருடைய சம்பளம் அதிகமாக இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் சாந்தி மாஸ்டருக்கு ஒரு நாளைக்கு 21 ஆயிரத்தில் இருந்து 26 ஆயிரம் வரை சம்பளமாக பேசப்பட்டிருக்கிறது. அதில் 25 ஆயிரம் சம்பளம் என்று வைத்துக் கொண்டால் கூட இவருக்கு 15 நாட்களில் 3,75,000 சம்பளமாக கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் ஜிபி முத்துவை விட இவருக்கு கிடைத்த சம்பளம் ரொம்பவும் அதிகம் தான்.
ஏனென்றால் ஜிபி முத்துவுக்கு ஒரு நாளைக்கு 15000 மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டது. அந்த வகையில் அவர் 14 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ளார். அதன் மூலம் அவர் 2,10,000 சம்பளமாக பெற்றுள்ளார். அவரை பொறுத்தவரையில் இது அதிகமாக இருந்தாலும் சுவாரசியம் இல்லாத போட்டியாளராக இருந்த சாந்தி மாஸ்டரை விட இவர் குறைவாகவே பெற்று இருக்கிறார்.
இந்த செய்தி பிக் பாஸ் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் யார் சிக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கிடையே அதிகரித்துள்ளது. கடந்த வாரம் மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அசீம் நிச்சயமாக இந்த நாமினேஷனில் இடம் பிடிப்பார். அந்த வகையில் அவரை வீட்டை விட்டு துரத்த ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.