Sirkadikkum asai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ்க்கு படித்த திமிரு இருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி விஜயா மனோஜை தலையில் தூக்கி வைத்து ஆடுவதால் மற்றவர்களை மதிக்கவும் தெரியாது, திமிராகவும் நடந்து கொள்வார். அப்படித்தான் இப்பொழுது ஒரு ஸ்கூலில் பேசுவதற்கு கூப்பிட்டு இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் வீட்டில் இருப்பவர்களிடம் பெருமையாக பேசுகிறார்.
அப்பொழுது முத்து இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று அவர் சில விஷயங்களை சொல்லும் பொழுது எல்லோரும் முத்து பேசியதற்கு கைதட்டி விடுகிறார்கள். அந்த அளவுக்கு முத்து அவருக்கு தெரிந்த விஷயத்தையும் குழந்தைகளுக்கு தேவைப்படும் விஷயத்தையும் சொல்லி அசத்தி விடுகிறார். ஆனால் மனோஜ், தான் படித்தவன் எனக்கு தான் அதிகமாக தெரியும் என்ற கர்வத்தில் பேசுகிறார் என்பதை சுருதி சொல்கிறார்.
அத்துடன் மனோஜ் பேச ஆரம்பிக்கும் பொழுது தெருவில் நாய் குலைக்க ஆரம்பித்து விடுகிறது. இதனால் கடுப்பான மனோஜ் அந்த நாயை கல்லை கொண்டு எரிந்து விடுகிறார். உடனே அந்த நாயின் ஓனர் வீட்டிற்கு வந்து அடிபட்ட நாய்க்கு மருந்து செலவுக்கு காசு வேணும் என்று மனோஜிடம் இருந்து காசை வாங்கிட்டு போய் விடுகிறார். இதை பார்த்த முத்து, உன்னுடைய வீரத்தை வாயில்லாத ஜீவனிடமா காட்டுவாய் என்று கிண்டல் அடித்து விடுகிறார்.
அத்துடன் வெளியே போகும் பொழுது பார்த்து கவனமாக போ நாய் கடித்து விடாமல் என்று சொல்கிறார். அதே மாதிரி மனோஜை நாய் கடித்து விடுகிறது. அடுத்ததாக சுருதி, அம்மாவிடம் சென்று இனி எங்க விஷயத்தில் தலையிட வேண்டாம். ரவி விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கோபமாக திட்டி சண்டை போட்டு வருகிறார்.
பிறகு முத்து நல்லா பேசுகிறார் என்று முடிவு பண்ணிய சுருதி நான் ஆரம்பிக்கும் ஹோட்டலில் சாப்பிட்டு அதைப்பற்றி நீங்கள் தான் youtube இல் ரிவ்யூ கொடுக்க வேண்டும் என்று முத்துவை கூப்பிடுகிறார். மேலும் சுருதி செய்யும் எல்லா விஷயத்திலும் நிதானமும் நம்பிக்கையும் இருக்கிறது. ஆனால் அதைக் கெடுக்கும் விதமாக ரவி மற்றும் நீத்து மூலம் சுருதிக்கு சிக்கல்கள் வர வாய்ப்பு இருக்கிறது.