Siragadikka Aasai Serial actress open talk: விஜய் டிவியில் டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் நடிகை, சமீபத்திய பேட்டியில் பல விஷயங்களை பளிச்சுன்னு சொல்லி பரபரப்பை கிளப்பி இருக்கிறார். இவர் 14 வயதில் நடிகையாக வேண்டும் என்பதற்காகவே ஆறு ஊசிகளை போட்டு உடல் எடையை ஏற்றி இருக்கிறார்.
சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகன் முத்துவின் அம்மா விஜயா உடைய தோழியாக பார்வதி கேரக்டரில் நடிப்பவர் தான் நடிகை பாக்கியஸ்ரீ. இவர் சீரியலுக்கு வருவதற்கு முன் வெள்ளித்திரையில் 80-களில் நிறைய படங்கள் நடித்தவர்.
முதலில் மலையாளத்தில் அறிமுகமாகி, அதன் பின் தமிழில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான ‘தேவியின் திருவிளையாடல்’ படத்தின் மூலம் அறிமுகம் ஆகி இருக்கிறார். அந்தக் காலத்தில் ஹீரோயின்கள் எல்லாம் பப்ளியாக இருந்தால்தான் சான்ஸ் கிடைக்கும். ஆனால் 14 வயதில் நடிக்க வந்த நடிகை பாக்கியஸ்ரீ-க்கு அவ்வளவு உடம்பு இருக்காதாம்.
ஹீரோயினாவதற்கு 6 ஊசி போட்ட நடிகை
இதனால் அவருடைய உடல் எடையை ஊசி போட்டு ஏற்றி, கொழுக்குமொழுக்கு ஆகி இருக்கிறார். அதன் பின்பு இவருக்கு நிறைய வாய்ப்புகள் குவிந்தத்துடன் காலையில் மலையாளம், மதியம் தெலுங்கு, மாலை தமிழ் என மூன்று மொழிகளிலும் செம பிஸியாக நடித்திருக்கிறார்.
இவர் புகழின் உச்சத்தில் இருந்த சமயத்தில், அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கைக்கு சென்று விட்டாராம். அதன்பின் மறுபடியும் நடிக்க ஆசைப்பட்ட பாக்கியஸ்ரீ, இப்போது சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். அதிலும் சிறகடிக்க ஆசை சீரியலில் இவர் நடிக்கும் பார்வதி கதாபாத்திரம் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.