Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயா பிரச்சனையில் மாட்டிக்கொண்ட பொழுதும் வீட்டில் இருப்பவர்களை திட்டிக் கொண்டே இருக்கிறார். முக்கியமாக ரோகிணியின் மகனாக இருக்கும் க்ரிஷ் விஜயாவிடம் படாதபாடு படுகிறார். இதனால் ரோகிணி இந்த பிரச்சனையை எப்படியாவது முடித்துவிட்டு விஜயாவை சமாதானப்படுத்த வேண்டும் என்று லோக்கல் ரவுடி சிட்டியிடம் உதவி கேட்கிறார்.
லோக்கல் ரவுடி சிட்டியிடம் நடந்த விஷயத்தை சொல்லி ரதி மற்றும் தீபன் வீட்டில் மிரட்ட சொல்கிறார். அடுத்ததாக முத்துவிடம் மனோஜ் கேட்ட உதவிபடி முத்து, ரதி தீபன் வீட்டுக்கு சென்று சமாதானம் பேசுகிறார். ஆனால் அவர்கள் சமாதானம் ஆகாமல் பணம் வேண்டும் என்று குறிக்கோளுடன் பேச ஆரம்பித்ததும் முத்து பணம் கொடுக்க முடியாது என்று கரராக பேசிவிட்டு கிளம்பி விடுகிறார்.
இதையெல்லாம் பார்த்த லோக்கல் ரவுடி சிட்டியின் அடியாட்கள் ரதி தீபன் குடும்பத்தை அடித்துவிட்டு பழியை முத்து மீது போட்டு விட்டார்கள். உடனே முத்து மீது ரதி தீபன் வீட்டில் இருப்பவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்து விடுகிறார்கள். அதன் படி போலீஸ் வீட்டிற்கு வந்து முத்துவை அரெஸ்ட் பண்ணிட்டு போகிறார்கள்.
ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் அருண், போலீஸ் இடம் முத்துவை பார்த்து இவன் என்னுடைய குடும்பம் தான். இவனுடைய மனைவி சாதாரண பூ விக்கிறவங்க, இவனும் சாதாரண டிரைவர் தான் என்று நக்கல் அடிக்கும் விதமாக சொல்லியதால் முத்துக்கு கோபம் வந்து சும்மா சும்மா எங்களை பார்த்து சாதாரணமாக என்று சொல்ல வேண்டாம்.
எல்லோருமே சாதாரணமானவர்கள் தான், ஏன் இவனும் சாதாரண போலீஸ் தான் என்று வாக்குவாதம் பண்ண ஆரம்பித்து விட்டது. பிறகு போலீஸ், முத்துவை லாக்கப்பில் போட்டு விட்டார்கள். அடுத்ததாக வெளியே வந்த போலீஸிடம் அருண் சொன்னது என்னவென்றால் நான் எப்பொழுதும் நியாயத்து பக்கம் தான் பேசுவேன்.
அவன் எல்லாம் என்னுடைய குடும்பமே கிடையாது, முரட்டு பையன் நீங்கள் என்ன வேணாலும் பண்ணுங்க. கொஞ்ச நாள் அவன் ஜெயிலிலேயே இருக்கட்டும் என்று சகுனி வேலையை பார்க்கும் அளவிற்கு போலீஸ் இடம் கொளுத்தி போட்டு விடுகிறார். செய்யாத தப்புக்கு லாக்கப்பில் இருக்கும் முத்துவை மீனா நிச்சயம் வெளியே கொண்டு வந்து விடுவார்.