முத்து காரில் இருந்த க்ரிஷ்.. ரோகினிடமிருந்து விலகிய பையன், அம்மாவாகிய மீனா

Sirakadikkum asai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகினி யாரிடமும் மாட்டக்கூடாது என்பதற்காக கிரிசை ஒரு ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்தார். ஆனால் க்ரிஷுக்கு அங்கு இருக்க பிடிக்காததால் அங்கிருந்து ஓடி போய் வெளியே இருந்த முத்து கார் பின்னாடி ஏறிக்கொண்டார். க்ரிஷ் காரில் தான் இருக்கிறான் என்று தெரியாமல் முத்துவும் மீனாவும் அம்மா வீட்டிற்கு போகிறார்கள்.

அப்படி போனதும் எதேர்ச்சியாக முத்து காருக்குள் பார்க்கும் பொழுது கிரிஷ் மயக்கத்தில் இருக்கிறார். உடனே முத்து மீனா கிரிசை காப்பாற்றி வீட்டிற்கு கூட்டிட்டு போய் விடுவார்கள். இன்னொரு பக்கம் க்ரிஷ் காணவில்லை என்று ரோகினி பதட்டமாகி இருக்கிறார். எப்படியும் இந்த சூழ்நிலையில் ரோகினி, கிரிசை பார்த்துக் கொள்ள முடியாது.

அதனால் மறுபடியும் முத்துமீனா கூட தான் கிரிஷ் இருக்க போகிறார். அந்த வகையில் இனி கிருஷ்க்கு அம்மாவாக மீனா மாறி அனைத்து பணிவிடையும் செய்யப் போகிறார். இதனால் கூடிய சீக்கிரத்தில் ரோகிணி தான் கிரிஷ் அம்மா என்ற விஷயம் தெரிய வரப்போகிறது. ஆனால் இந்த சீரியலில் மட்டும் ரோகினி ஏகப்பட்ட விஷயங்களை மறைத்துக் கொண்டு தில்லாலங்கடி வேளையிலே பார்த்து வருகிறார்.

அதையெல்லாம் வெளிக்கொண்டு வராமல் அடுத்தடுத்த விஷயங்களை வைத்து ரோகிணியை தப்பிப்பது போல் காட்டி வருவதால் இந்த நாடகம் தற்போது பார்ப்பவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி விட்டது. மறுபடியும் டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல புள்ளிகளை பெற வேண்டும் என்றால் ரோகிணி விஷயம் ஒவ்வொன்றும் வெளியே வந்தால் தான் சுவாரஸ்யமாக இருக்கும்.