Sirakadikkum Asai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், கிரிஷ் வீட்டில் இருக்கக் கூடாது என்று மனோஜ் பிரச்சனை பண்ணினார். ஆனால் மனோஜ் விஜயாவை தவிர மற்றவர்கள் அனைவரும் க்ரிஷ் வீட்டில் இருக்கட்டும் என்று சொல்லியதால் மனோஜால் எதுவும் பண்ண முடியவில்லை.
இருந்தாலும் க்ரிஷ் பாட்டியை கண்டுபிடிக்க வேண்டும் என்று முத்து தேடிப்பார்க்கிறார். அந்த வகையில் கிரிஷ் பாட்டி தினமும் கோவிலுக்கு வருகிறார் என்ற விஷயம் மீனா கண்டுபிடித்து விட்டார். அடுத்து கிருஷை கூட்டிட்டு அண்ணாமலை ஸ்கூலுக்கு வந்து விடுகிறார்.
அண்ணாமலை விட்டுட்டு போனதும் ரோகிணி, கிருஷை கூட்டிட்டு ஸ்கூலில் டிசி வாங்கிட்டு வித்யா வீட்டுக்கு போகிறார். வித்யாவிடம் உதவி கேட்கும் விதமாக ஒரு வாரம் மட்டும் கிரிஷ் உன் வீட்டில் தங்கட்டும். அதற்குள் நான் கிரிஷ் தங்குவதற்கு ஒரு ஏற்பாடு பண்ணி விடுகிறேன்.
இப்போது கிருஷ் இங்கே இருப்பது யாருக்கும் தெரிய வேண்டாம். இவனால் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனை வருகிறது. என் மாமியாரும் வாய்க்கு வந்தபடி திட்டுகிறார். என்னால் எதுவும் பேச முடியவில்லை, அதனால் பார்க்கவே பாவமாக இருக்கிறது. வேற வழி நான் பண்ணும் வரை இங்கே ஒரு வாரத்திற்கு இருக்கட்டும் என்று வித்யாவிடம் கெஞ்சி விட்டுட்டு போகிறார்.
இது தெரியாத முத்து, கிருஷை ஸ்கூலில் கூட்டிட்டு வர போகிறார். அப்பொழுது கிரிஷ் அம்மா வந்து டிசி வாங்கிட்டு போய் கிருஷை கூட்டிட்டு போன விஷயத்தை தெரிந்து கொள்கிறார். இதை வீட்டில் வந்து முத்து சொல்கிறார். அதற்கு மீனா, க்ரிஷ் விஷயத்தில் ஒரு விஷயம் மர்மமாகவே இருக்கிறது. ஏதோ ஒரு விஷயம் நமக்கு தெரியக்கூடாது என்று யாரோ மறைப்பது போல் இருக்கிறது.
அது என்னன்னு நம்ம கண்டுபிடிக்கணும் என்று முத்துவிடம் சொல்கிறார். இதை ரோகிணி ஒட்டு கேட்டு உஷார் ஆகி விடுகிறார். ஆனால் க்ரிஷ் பாட்டி அங்கே தான் இருக்கிறார், இதனால் கிரிஷ் மற்றும் பாட்டி மூலம் ரோகிணிக்கு பிரச்சனை ஆரம்பமாகப் போகிறது.