Sirkadikkum asai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி பற்றிய ரகசியங்களும் வெளிவரவில்லை. முத்து மீனாவும் முன்னேறாமல் அந்த வீட்டில் எடுபிடி வேலைதான் பார்த்துக் கொண்டு வருகிறார்கள். இதுல கிரிஷ் பற்றிய விஷயம் எப்பொழுது தான் அனைவருக்கும் தெரியவரும் என்று எதிர்பார்ப்புடன் இருந்த அனைவருக்கும் ஏமாற்றம்தான்.
என்னதான் பிரச்சனை வந்தாலும் அதிலிருந்து நான் ஈசியாக எஸ்கேப் ஆகி விடுவேன் என்று ரோகிணி கிரிமினல் வேலையை பார்த்து வருகிறார். அந்த வகையில் க்ரிஷ் படிக்கும் ஸ்கூலுக்கு மனோஜ் போக கூடாது என்று பிளான் பண்ணிய ரோகிணி சதி வேலையை பார்த்தார். அத்துடன் மனோஜின் நண்பர் அந்த ஸ்கூலுக்கு போயிட்டு வந்து போட்டோக்களை எடுத்ததை மனோஜிடம் கொடுக்கிறார்.
அதையும் மனோஜ் பார்த்து விடக்கூடாது என்று ரோகிணி போட்டோக்களை வாங்கி விடுகிறார். பிறகு அதில் க்ரிஷ் இருக்கும் போட்டோவை மட்டும் தனியாக எடுத்து யாருக்கும் தெரியாமல் கிழித்து விடுகிறார். அடுத்து அருண், சீதாவிடம் முத்துவை பற்றி தவறாக சொல்லி சீதாவுக்கும் மீனாவுக்கும் இடையில் பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக சகுனி வேலையை பார்த்து விட்டார்.
இதனால் சீதா, அருண் சொல்வதை நம்பி கோபமாக மீனாவுக்கு போன் பண்ணி தனியாக பேச வேண்டும் என்று கூப்பிடுகிறார். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் இடையே விரிசல் வரப்போகிறது. இதனை தொடர்ந்து விஜயா, என்ன சமையல் என்று அடுப்பாங்கரையில் போய் பார்க்கிறார். அப்பொழுது சமைத்த உணவு எதுவும் இல்லாததால் தூங்கிக்கொண்டிருக்கும் மீனா மீது கோபப்பட்டு தண்ணியை தூக்கி விஜயா ஊற்றி விடுகிறார்.
இதை பார்த்து கோபப்பட்ட முத்து, விஜயாவை அடிப்பதற்கு கை ஓங்குகிறார். ஆனாலும் அம்மாவாகி போய்விட்டார் என்று கோபமாக சண்டை போடுகிறார். இருந்தாலும் வீட்டை விட்டு போகாமல் அந்த வீட்டிலேயே இருப்பதால் தான் மதிப்பும் மரியாதையும் இல்லாமல் வேலைக்காரியாக இருக்கும்படி மீனாவின் நிலைமை இருக்கிறது.