Sirakadikkum asai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயா மீனாவிடம் மோசமாக நடந்து கொண்டதால் அண்ணாமலை விஜயாவை பயமுறுத்தும் விதமாக நீ என்ன பண்ணாலும் மீனா பொறுத்துக் கொண்டு இருக்க மாட்டாள். கொஞ்சமாவது மீனாவுக்கு மதிப்பு மரியாதையும் கொடுத்தால்தான் உனக்கு திருப்பி கிடைக்கும். இல்லையென்றால் மீனா, கோபத்தில் என்ன வேணாலும் பண்ண வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கை கொடுத்துவிட்டார்.
இதனால் பயந்து போன விஜயா, இனி நமக்கு என்ன வம்பு என்று மீனாவிடம் இருந்து ஒதுங்க போகிறார். அடுத்ததாக மீனாவிற்கு ஏன் காய்ச்சல் வந்தது என்று முத்துவுக்கு தெரியும் விதமாக சீதாவுக்கு நடந்த சண்டையும். அதனால் மீனா, சீதாவை அடித்த விஷயமும் முத்து தெரிந்து கொள்கிறார். அத்துடன் அருண் செய்த சகுனி வேளையும் முத்து தெரிந்து கொண்டார்.
இதை சீதாவுக்கு புரிய வைக்கும் விதமாக சீதாவையும் மீனாவையும் கூட்டிட்டு காரில் உட்கார வைக்கிறார். அடுத்ததாக அருண் இருக்கும் இடத்திற்கு சென்று அருணிடம் முத்து பேசுகிறார். அப்படி பேசும் பொழுது சீதாவிற்கு ஃபோன் பண்ணி அதை ஆன்னில் வைத்து அருண் சொல்வதைக் கேட்க வைக்கிறார். அந்த வகையில் முத்து அருணிடம் அடியாட்கள் வைத்து அடித்தது நானா என்று கேட்கிறார்.
அதற்கு அருண் நீ இல்லை என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனாலும் சீதாவிடம் உன்னை பற்றி சொன்னால் தான் உன் மீது இருக்கும் மதிப்பும் மரியாதையும் குறையும் என்பதற்காக நான் அப்படி சொன்னேன். நான் சொன்னதை நம்பி சீதாவும் உன்னை தவறாக புரிந்து கொண்டார். எனக்கு இதுதான் வேணும் என்று நக்கலாக சொல்கிறார்.
உடனே முத்து, இப்பொழுது உன்னை அடிப்பதற்கு நிஜமாகவே ஆட்களை கூட்டி வந்திருக்கிறேன் என்று சொல்லி போனை எடுத்து வெளியே வாங்க என்று கூப்பிடுகிறார். உடனே காரில் இருந்து சீதா மற்றும் மீனாவும் வெளியே வருகிறார்கள். அருண் பற்றியான கேரக்டரை முத்து சீதாவுக்கு புரிய வைத்து விடுகிறார். அடுத்ததாக மனோஜ் ஷோரூம் க்கு சென்று ராஜா ராணி மறுபடியும் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்.
உடனே மனோஜ், கொடுக்க முடியாது போலீசுக்கு நானே போன் பண்ணி விசாரிக்க சொல்கிறேன் என்று கூப்பிடுகிறார். ஆனால் போலீஸ் வந்துவிட்டால் ரோகிணி மாட்டிக்கொள்வார் என்ற பயத்தினால் ரோகிணி போலீஸ் இடம் சொல்ல வேண்டாம் என்று சொல்லி அவர்கள் கேட்ட படி பணத்தை கொடுக்க வைக்கிறார்.
ஆனால் போலீஸிடம் மனோஜ் போயிருந்தால் ராஜா ராணியை பயந்து போய் ஓடி இருப்பார்கள். மனோஜும் இந்த விஷயத்தில் தப்பித்து இருப்பார். ஆனால் ரோகினி மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக மனோஜ் கூடவே இருந்து ஆப்பு வைக்கும் விதமாக எல்லா திருட்டு வேலையும் பார்த்து வருகிறார். மனோஜும் ரோகிணியை கண்மூடித்தனமாக நம்பி ஏமாந்து போய் நிற்கிறார்.