விஜயா காட்டும் போலியான பாசத்திற்கு அடிமையான முத்து.. ஏமாறப்போகும் ரோகிணி மனோஜ்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சீதாவின் தாலி பெருக்கு பங்க்ஷனுக்கு சம்மந்தி குடும்பத்தை முறைப்படி கூப்பிட வேண்டும் என்று முத்துவின் வீட்டிற்கு மீனாவின் அம்மா வருகிறார். அப்படி வரும்பொழுது மீனா, சீதா மாமியார் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் என் மாமியார் கொடுக்க மாட்டாங்க.

அதனால் நீ அவங்க பேசுவதை நினைத்து கவலைப்பட கூடாது என்று சொல்லி வீட்டுக்குள் கூட்டிட்டு போகிறார். அதற்கு மீனாவின் அம்மா, அவர்களைப் பற்றி எனக்கு தெரியாதா நான் அதெல்லாம் எதிர்பார்த்து வரவே இல்லை. முறைப்படி சொல்லணும் என்று தான் வந்தேன் என்று சொல்லி அண்ணாமலை மற்றும் அனைவரையும் மீனா கூப்பிடுகிறார்.

அப்பொழுது அண்ணாமலை இடம் சீதாவிற்கு தாலி பெருக்கு பங்க்ஷன் இருக்கிறது நீங்கள் வரவேண்டும் என்று கூப்பிடுகிறார். அதற்கு அண்ணாமலை வெள்ளிக்கிழமை எனக்கு ஸ்கூலில் முக்கியமான வேலை இருக்கிறது. நான் இன்னொரு நாள் வந்து சீதாவை பார்த்துக் கொள்கிறேன். எனக்கு பதில் ரவி முத்து குடும்பத்துடன் வருவார்கள் என்று சொல்லிவிடுகிறார்.

உடனே விஜயா, இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் விதமாக இந்த ஃபங்ஷனில் கலந்து கொண்டு எல்லோரிடமும் நல்லவிதமாக பேசினால் அதை வீடியோவாக வைத்து டாக்டர் பட்டத்தை பெற்று விடலாம் என்று சீதாவின் அம்மாவிடம் மதிப்பு மரியாதையும் கொடுத்து நான் வந்து முன்னாடி நின்று நடத்தி வைக்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அதே மாதிரி சீதாவின் ஃபங்ஷனுக்கு போன விஜயா எல்லோரிடமும் நல்லா பேசி பாசத்தைக் காட்டி டிராமா பண்ண ஆரம்பித்து விட்டார். முத்து மீனா மற்றும் மற்றவர்களுக்கு விஜயாவின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கிறது. ஆனாலும் முத்துவுக்கு ஓரளவுக்கு புரிந்து விட்டது, ஏன்னா விஜயா செய்யும் எல்லா விஷயத்தையும் பார்வதி அத்தை வீடியோ எடுப்பதை முத்து பார்த்து விடுகிறார்.

அதனால் பார்வதியிடம் முத்து போய் விசாரித்து தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனை தொடர்ந்து விஜயா கோவிலில் அன்னதானம் கொடுப்பதற்கு தயாராகி விட்டார். இதை தெரிந்து கொண்ட முத்து, அம்மா கையால் சாப்பிட வேண்டும் என்ற பாசத்தில் விஜயாவிடம் சாப்பாடு போட சொல்லி சந்தோஷமாக சாப்பிடுகிறார். ஆனால் இதெல்லாம் போலியான பாசம் என்று தெரியாமல் முத்து விஜய காட்டும் அக்கரைக்கு மயங்குகிறார்.

அடுத்ததாக ரோகிணி மற்றும் மனோஜ் வைத்திருக்கும் ஷோரூமில் மாதாந்திர முறையில் பணத்தை வாங்கியதால் மொத்த பணத்தையும் ஷோரூமில் இருக்கும் லாக்கரில் வைத்திருக்கிறார். இதை தெரிந்து கொண்ட ராஜா ராணி அந்த பணத்தை திருடிட்டு போய் விடுவார்கள். இவர்களை நம்பியதால் ரோகிணியும் மனோஜும் ஏமாந்து போய் நடுத்தெருவில் நிற்கப் போகிறார்கள்.