அண்ணாமலை சொன்னதை கேட்டு திருந்திய விஜயா.. ரோகிணி கதை முடியும் நேரம் வந்தாச்சு

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி போலீஸிடம் மாட்டியதால் மீனா இறக்கப்பட்டு முத்துவிடம் என்ன இருந்தாலும் ரோகிணி நம்ம குடும்பத்தில் ஒருத்தர். அதனால் ரோகிணி ஜெயிலில் இருந்தால் அது நல்லா இருக்காது. மாமாவுக்கும் கஷ்டம் என்று சொல்லிவிட்டார். உடனே முத்து போலீஸிடம் பேசி ரோகிணியை வெளியே கூட்டிட்டு வந்து விடுகிறார்.

ரோகினி வீட்டிற்கு வந்ததும் விஜயா, ரோகினி செய்த காரியத்திற்கு சண்டை போடுகிறார். அதற்கு ரோகிணி 10 லட்ச ரூபாய் பணத்தை என்ன கொடுக்க சொன்னால் நான் எங்கிருந்து கொடுப்பேன். அதனால் தான் எனக்கு தெரிந்தவரிடம் சொல்லி இந்த பிரச்சினையை முடித்து விடலாம் என்று நினைத்தேன் என சொல்கிறார். அதற்காக ரவுடி இடமா போகணும் என்று அண்ணாமலையும் திட்டுகிறார்.

இதற்கெல்லாம் ரோகிணி ஒத்த சாரி கேட்டு எல்லாத்தையும் சமாளித்து விடுகிறார். பிறகு முத்து இதற்கெல்லாம் காரணம் அம்மா தான் என்று விஜயாவை பார்த்து சொல்லியதும் அண்ணாமலையும் ஆமாம் நீ தான் காரணம் என்று விஜயா மீது கோபப்படுகிறார். அதற்கு விஜயா வீட்டுக்கு வந்த மருமகள் எல்லாம் நான் வேலைக்கு போறேன் என்று திமிரா போய்கிட்டு இருக்காங்க.

நானும் வீட்டில் இருந்தால் என்ன மதிக்க மாட்டாங்க, அதனால் தான் ஏதாவது ஒரு வேலைக்கு போகணும் என்று பரதநாட்டியம் சொல்லிக் கொடுத்தேன். கொஞ்சமாவது மாமியார் என்று மதிப்பு மரியாதை கொடுக்குறாங்களா என விஜயா மூன்று மருமகளையும் திட்ட ஆரம்பித்து விடுகிறார். உடனே அண்ணாமலை மாமியார் மாதிரி நடந்து கொள்ளணும், நீ ஒன்னும் ஜெயில் வார்டன் கிடையாது உன்னை பார்த்து பயப்படறதுக்கு என்று திட்டி விடுகிறார்.

அடுத்ததாக விஜயா தனியாக இருந்து யோசித்துப் பார்க்கும்போது அண்ணாமலை அட்வைஸ் பண்ணும் விதமாக இந்த வீட்டில் இருப்பவர்களிடம் பாசத்தை காட்டி நல்ல விதமாக பேசி பழகு. உன்னால இந்த குடும்பத்திற்கும் எனக்கும் பெருமை சேர்க்கும்படி ஏதாவது பண்ணு என்று சொல்கிறார். உடனே விஜயா குடும்பத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றால் நாம் நல்ல காரியம் செய்ய வேண்டும் என்று கோவிலில் அன்னதானம் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்.

பிறகு அங்கு வந்தவரிடம் விஜயாவின் புகழை பற்றி சொல்லி பார்வதி விஜயாவுக்கு ஒரு டாக்டர் பட்டத்தை வாங்கி கொடுங்க என சொல்கிறார். அதற்கு அந்த நபர் விஜயா அப்படி என்ன பண்ணி இருக்காங்க என்று கேட்ட பொழுது என் வீட்டுக்காரர் ரயில்வே-ல ஒர்க் பண்ணும் பொழுது ரயிலில் குறுக்கே வந்து ஒரு நபர் இறந்து போய்விட்டார். பிறகு அந்த குடும்பத்திற்கு ஏதாவது பண உதவி செய்யலாம் என்று நினைத்தேன்.

ஆனால் அதைவிட பெருசா ஏதாவது பண்ண வேண்டும் என்று அந்த குடும்பத்தில் இருக்கும் மூத்த பெண்ணே என் மகனுக்கு கட்டி வைத்து நல்லபடியாக பார்த்து வருகிறேன் என்று பெருமை சொல்லும் விதமாக வாய்க்கு வந்தபடி பேசுகிறார். கடைசியில் அந்த அன்னதானத்துக்கு முத்து வந்து சாப்பிடும் பொழுது விஜயா பாசத்தை காட்டும் மூலமாக முத்துக்கு சாப்பாடு பரிமாறுகிறார். இதனை தொடர்ந்து ரோகினியின் கதை முடியும் நேரம் வரப்போகிறது, அதுவும் க்ரிஷ் மூலமாக மாட்டிக் கொள்ளப் போகிறார்.