கல்யாணம் என்ற பெயரில் மதக்கலவரத்தை உண்டாக்கிய சிவகாமி.. அதிர்ச்சியில் மொத்த குடும்பம்

விஜய் டிவியில் தற்போது அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜா ராணி 2. இதில் ஜெஸியை ஏமாற்றியது ஆதி தான் என்பது சிவகாமியின் மொத்த குடும்பத்திற்கும் தெரியவந்துள்ளது. இதனால் சரவணன் ஆதியை திட்டி அடிக்க கை ஓங்குகிறார்.

மேலும், சிவகாமி நீ என் வயித்துல தான் பொறந்தியா எனக்கு அருவருப்பா இருக்கு வீட்டை விட்டு வெளியே போ என துரத்துகிறார். அப்போது சந்தியா அதை தடுத்து நிறுத்துகிறார். அதன் பின்பு ஆதி தான் செய்த தவறை நினைத்து எல்லார் காலிலும் விழுந்த மன்னிப்பு கேட்கிறார்.

அப்போது சரவணன் இந்த பிரச்சனைக்கு ஒரே முடிவு இருவருக்கும் விரைவில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறுகிறார். ஆனால் சிவகாமி கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமான பொண்ணு நம்ம குடும்பத்துக்கு எப்படி சரி வரும் என ஏளனமாக பேசுகிறார்.

ஆதியை நம்பி தான் அந்த பொண்ணு ஏமாந்துச்சு, அதை தவிர வேற எந்த தப்பும் பண்ணல என சரவணன் வாதாடி சிவகாமியை சம்மதிக்க வைக்கிறார். ஒரு வழியாக கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்ட சிவகாமி, அதன் பின்பு போட்ட கண்டிஷன் தான் அனைவரையும் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.

அதாவது ஜெசி கிறிஸ்டின் மதத்தைச் சேர்ந்தவர். இதனால் அவளின் மத அடையாளத்தை மொத்தமாக மறந்து விட்டு, அவளுடைய அம்மா-அப்பா யார் உடனும் அவளுக்கு உறவு இருக்கக்கூடாது, ஒரு அனாதை போல தான் இந்த வீட்டுக்கு ஜெசி வரவேண்டும் என சிவகாமி கட்டளை இடுகிறார்.

இந்த விஷயத்துல எனக்கு உடன்பாடு இல்லை, இது நியாயமற்ற விஷயம் ஜெசி மட்டுமல்ல எந்த பெண்ணும் இதற்கு ஒற்றுக்கொள்ள மாட்டார் என சந்தியா சொல்கிறார். ஆனால் தான் எடுத்த முடிவில் சிவகாமி உறுதியாக உள்ளார். மேலும் வேற வழி இல்லாமல் ஜெசி இந்த திருமணத்திற்கு ஒற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.