Bigg Boss Tami 9: விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் இந்த வருடத்திற்காக ஆரம்பமாக போகிறது. இதற்கான வேலைகள் எல்லாம் தொடங்கிய நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் போகப் போகும் போட்டியாளர்களின் லிஸ்ட் தயாராகிவிட்டது. அந்த வகையில் இரு தினங்களுக்கு முன் பிக் பாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் லோகோ மற்றும் தொகுப்பாளரை தெரிவிக்கும் விதமாக வீடியோவை வெளியிட்டது.
அந்த வகையில் கடந்த சீசன் போல இந்த சீசனையும் தொகுத்து வழங்குவதற்கு விஜய் சேதுபதி தயாராகி விட்டார். மேலும் செப்டம்பர், முதல் வாரத்தில் பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பமாக போகிறது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் லிஸ்ட் வெளி வந்திருக்கிறது. இதில் வழக்கம்போல் விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் தான் வரப்போகிறார்கள்.
இந்த லிஸ்டில் சித்தார்த் குமரன், இவர் விஜய் டிவியில் ரெக்க கட்டி பறக்குது, பனி விழும் மலர்வணம், ஈரமான ரோஜாவே போன்ற பல சீரியல்களில் முன்னணி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார். அடுத்ததாக தென்றலே மெல்ல வந்து பேசு சீரியல் மூலம் பிரபலமான வினோத் பாபு போட்டியாளராக பயணிக்க போகிறார்.
இவருடைய வருகைக்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கப்போகிறது. அடுத்ததாக ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான சித்து, பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த ஃபரினா ஆசாத், அடுத்து சீரியல் மூலம் பிரபலமான புவியரசன். அடுத்ததாக குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு வரும் டோலி, ஜோடி மூலம் பரிச்சயமான டான்ஸர் சிப்பு சிப்பி.
அடுத்ததாக youtube ரீல்ஸ் இப்படி சோசியல் மீடியாவில் பிரபலமான அகமது மீரன் வருகிறார். அடுத்ததாக பாக்கியலட்சுமி சீரியலில் இனியா கதைப்பாத்திரத்தில் நடித்த நேகா ராஜேஷ் போட்டியாளராக பங்கு பெறுகிறார். இவர்களைத் தொடர்ந்து தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியல் மூலம் பரிச்சயமான நட்சத்திர நாகேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் போகிறார். அடுத்ததாக பால சரவணன், vj பார்வதி, ஷபானா இவர்களும் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாயிருக்கிறது.
இன்னும் ஒரு சில நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் போட்டியாளர்களின் லிஸ்ட் விஜய் டிவி வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கடந்த சீசன் போல இந்த முறையும் இரண்டு வீடுகள் வைக்கப்பட்டு பெரிய வீடு ஒன்று சின்ன வீடு என்று வரப்போகிறது. இதில் ஆரம்பத்தில் ஆண்கள் பெண்கள் என்று தனியாக விளையாட்டை ஆரம்பித்து அதன் பின்பு விறுவிறுப்பை கூட்டப் போகிறார்கள். 100 நாள் பிக் பாஸ் வீடு ரணகளமாக இருக்கப்போகிறது.