சன் டிவி பிரைம் டைம் சீரியல்.. என்டரி ஆகும் சோனியா அகர்வால்

Sun tv: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியலுக்கு மக்கள் பேராதரவு கொடுத்து வருகிறார்கள். முக்கியமாக பிரைம் டைமில் வரும் சீரியலுக்கு டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் கிடைக்கிறது. அதனால் தொடர்ந்து இதை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக சன் டிவி சேனல் அதிரடியாக சில விஷயங்களை செய்யப் போகிறது.

அந்த வகையில் இப்போது கதை கொஞ்சம் டல் அடிக்கும் விதமாக இருப்பது கயல் சீரியல்தான். இதை இன்னும் விறுவிறுப்பாகவும் பார்ப்பவர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் சில மாற்றங்கள் நடக்கப்போகிறது. அந்த வகையில் இதில் கெஸ்ட் ரோலில் சோனியா அகர்வால் என்டரி கொடுக்கப் போகிறார்.

இவரை தொடர்ந்து மூன்று முடிச்சு சீரியலில் வடிவுக்கரசியும் வரப்போகிறார். இந்த இரண்டு நாடகமே மக்கள் விரும்பி பார்க்கும் நாடகமாக இருப்பதால் இதில் சின்ன சின்ன மாற்றங்களை செய்து இன்னும் அதிக புள்ளிகளை பெற வைக்கும் விதமாக சில மாற்றங்கள் நடக்கப்போகிறது.

கயல் சீரியலில் மூர்த்தி கேரக்டர் என்னாச்சு என்று தெரியாமல் சஸ்பென்சாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் நிஜ வாழ்க்கையில் மூர்த்தி சர்ச்சையில் சிக்கி இருப்பதால் அதை சரி செய்யும் வரை நாடகத்துக்கு அவர் வரப்போவதில்லை. அவரை வைத்து வரும் காட்சிகளுக்கு பதிலாக வேறு ஒரு டிராக் வரப்போகிறது. அதற்காகத்தான் சோனியா அகர்வால் களமிறங்க போகிறார்.