Director Shankar Actor Ramcharan: ஹோலிவுட்டின் பிரம்மாண்டமான இயக்குனர் சங்கர் தற்போது தெலுங்கு தேசத்திலும் அவருடைய முத்திரையைப் பதித்து வருகிறார். அதற்காக தெலுங்கில் தில் ராஜு தயாரிப்பில் பெரிய பட்ஜெட் கூடிய படமாக கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ் ஜே சூர்யா மற்றும் சமுத்திரக்கனி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். அத்துடன் பிரம்மாண்ட இயக்குனர் மற்றும் ராம்சரண் கூட்டணி என்பதாலேயே இப்படம் பெரிய அளவில் வியாபாரம் ஆகி வருகிறது. இப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டும் கிட்டத்தட்ட 30 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது.
அதுபோக இந்த படத்தின் சாட்லைட் உரிமைகள் அனைத்தும் கிட்டத்தட்ட நூறு கோடிகளுக்கு மேல் தற்போது வரை லாபம் பெற்று சாதனை செய்திருக்கிறது. மேலும் இயக்குனர் சங்கர் படம் எந்த அளவுக்கு பிரம்மாண்டமாக இருக்கப் போகிறது என்பதை முதல் முறையாக தெலுங்கு ரசிகர்கள் பார்க்க ஆவலாக இருக்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருந்தாலும் இதையெல்லாம் அடித்து தூக்கும் அளவிற்கு அல்லு அர்ஜுனனின் புஷ்பா 2 படம் வியாபாரத்தில் சாதித்துக் காட்டி இருக்கிறது. அதாவது இப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் 45 கோடிகள் வியாபாரம் ஆகி, சங்கர் படத்தையே ஓவர் டேக் செய்யும் அளவிற்கு லாபத்தை பார்த்து வருகிறது.
அதற்குக் காரணம் புஷ்பா படம் எல்லா பக்கமும் வரவேற்பு பெற்று அதிக எதிர்பார்ப்புடன் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தற்போது அல்லு அர்ஜுனனின் புஷ்பா படத்தின் வியாபாரம் எல்லா விதத்திலும் முதலிடத்தில் இருந்து வருகிறது.
இதனால் சங்கர் ராம்சரணின் படத்தின் பிசினஸ் புஷ்பா படத்தை விட கொஞ்சம் கம்மியாகிவிட்டது. இருந்தாலும் இதில் போன லாபத்தை படம் ரிலீஸ் ஆன பிறகு கண்டிப்பாக சங்கர் அடித்து தூக்கிடுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை . ஒருவிதத்தில் ராம் சரணுக்கு இந்த அளவுக்கு லாபம் கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு முழு காரணமும் இயக்குனர் சங்கர் தான்.