பாக்கியாவுக்கு இடைஞ்சல் பண்ணும் சுதாகர்.. இனியா வைக்கப் போகும் ஆப்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கமிஷனர் ஆபீஸ்க்கு சென்று அண்ணன்கள் மீது புகார் கொடுக்க துணிந்த சுதாகர் குடும்பத்தை எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என்று இனியா, சுதாகர் வீட்டிற்கு போகிறார். அங்கே போனதும் கல்யாணத்துக்கு முன்னாடியே நீங்கள் உங்க பையனை பற்றி சொன்னீங்களா? எப்படி உங்களால் இப்படி பொய் பேச முடிகிறது.

எல்லா விஷயமும் தெரிந்து உங்க பையனை கல்யாணம் பண்றதுக்கு நான் என்ன முட்டாளா? என் பெற்றோர்கள் தான் அப்படி கல்யாணம் பண்ணி வைப்பாங்களா என்று கேள்வி கேட்கிறார். உங்களுக்கும் எங்களுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை, எங்க அண்ணனிடமும் என்னிடமும் பிரச்சனை பண்ணினீங்கன்னா பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன். உங்க மீது நான் கம்பளைண்ட் கொடுத்து விடுவேன் என்று சொல்கிறார்.

உடனே சந்திரிகா, நீ யாரிடம் போய் கம்ப்ளைன்ட் கொடுத்தாலும் அதை பெரிசு படுத்த முடியாத அளவிற்கு எங்களிடம் செல்வாக்கு இருக்கிறது என்று சொல்கிறார். பிறகு இனியா, அப்படின்னா பத்திரிக்கை மூலம் உங்கள் குடும்பத்தின் ஒழுக்கத்தை என்னால் வெளிச்சம் போட்டு காட்ட முடியும் செய்து காட்டவா என பயமுறுத்துகிறார். உடனே சுதாகர், எந்த பிரச்சனையும் வேண்டாம் என் பையனும் யாரையும் தொந்தரவு பண்ண மாட்டான்.

உங்க வீட்டில் இருந்தும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று இனியாவிடம் சொல்லிவிட்டார். பிறகு வீட்டிற்கு வந்த இனியா, கோபியிடம் நடந்த விஷயத்தை சொல்கிறார். அடுத்ததாக பாக்யா ஹோட்டலில் இருக்கும் பொழுது சுதாகரின் ஆள் ஒருவர் வந்து கல்யாண ஆர்டர் விஷயமாக பாக்யாவை சமைக்க சொல்லி புக் பண்ணி விடுகிறார்.

அதற்கு அட்வான்ஸ் ஆக 50,000 ரூபாய் பணத்தை கொடுத்து விடுகிறார். ஆனால் அதன் பிறகு அஞ்சு லட்ச ரூபாய் கொடுத்ததாக மாத்தி பேசி பாக்கியாவுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக அந்த ஆள் போலீஸ் இடம் கம்ப்ளைன்ட் கொடுத்து விடுகிறார். போலீஸ், பாக்யாவின் ஹோட்டலுக்கு வந்து விட்டார்கள். வந்து விசாரிக்கும் பொழுது இனியா அங்கு வந்து சுதாகர் அனுப்பி வைத்த ஆளிடம் எந்த மண்டபத்தில் கல்யாணம் என்று கேள்வி கேட்கிறார்.

அதற்கு அந்த ஆள், மண்டபம் பெயரே சொல்லிய பொழுது அப்படி ஒரு மண்டபமே இல்லை என்று எழில் போலீஸ்க்கு தெரியப்படுத்துகிறார். உடனே போலீஸ், அவர் மீது சந்தேகப்பட்டு கேள்வி கேட்கும் பொழுது அங்கிருந்து தப்பித்துக் கொண்டு ஓடி விடுகிறார். பிறகு இதற்கு பின்னணியில் இருந்து பிரச்சனை பண்ணியது சுதாகர் தான் என்று எழில், வீட்டில் வந்து சொல்கிறார்.

இதை கேட்டா இனியா, இனியும் அந்த குடும்பத்தை சும்மா விடக்கூடாது என்று சட்டப்படி விவாகரத்து வாங்கி அந்த குடும்பத்தை பற்றி பத்திரிக்கையில் எழுதி ஏமாற்றி கல்யாணம் பண்ண விஷயத்தையும் போட்டு உடைக்க போகிறார்.