பாக்யாவை டார்கெட் பண்ணும் சுதாகர்.. கண்மூடித்தனமாக நம்பும் கோபி குடும்பம்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், சுதாகரை பற்றி பாக்கியா என்ன சொன்னாலும் கோபியின் குடும்பம் நம்பாமல் சுதாகரை தான் கண்மூடித்தனமாக நம்பி வருகிறது. அதிலும் ஈஸ்வரி, இனியாவின் வாழ்க்கையை யோசித்து எதுனாலும் பேசி பழகு. அவளுடைய சந்தோசமான வாழ்க்கையை கெடுத்து விடாதே என்று பாக்யாவை நோகடித்து பேசுகிறார்.

பாக்கியாவும் மகளை கட்டிக் கொடுத்தாச்சு இனி ஒன்னும் பண்ண முடியாது என்ற நினைப்பில் சுதாகர் பண்ணும் அட்டூழியத்துக்கு பெருசாக ரியாக்ஷன் கொடுக்காமல் விடுகிறார். ஆனாலும் பாக்கியாவின் ஆசை இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகிறது என்று கவலைப்படும் கோபி, சுதாகரை சந்தித்து பேசுகிறார்.

அப்படி பேசும் பொழுது பாக்கியாவின் இன்னொரு ஹோட்டலையும் நீங்கள் விலை கொடுத்து வாங்கி விட்டீர்களா என்று கேட்கிறார். அதற்கு சுதாகர் எதுவுமே தெரியாத போல் அப்படி எல்லாம் எதுவும் இல்லையே அவங்க இன்னொரு ஹோட்டல் வச்சு நடத்துவதே எனக்குத் தெரியாது. இன்னும் சொல்லப்போனால் அந்த இடம் எங்க இருக்குன்னு கூட எனக்கு தெரியாது என்று சொல்லி கோபி காதில் பூ சுற்றி விட்டார்.

உடனே இந்த கோபியும் அதை நம்பிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பி விட்டார். அப்படி போகும் பொழுது பாக்யாவின் ஹோட்டலில் சுதாகர் காரை நிற்பதை பார்த்து ஹோட்டலுக்குள் போகிறார். அங்கே போனதும் ஹோட்டல் கடையின் ஓனர் மற்றும் சுதாகர் இருவரும் கை கொடுத்து பேசி கொண்டிருப்பதை கோபி பார்த்து விடுகிறார். பிறகு சுதாகரிடம் கோபி கேட்டதற்கு மறுபடியும் கோபியை முட்டாளாக்கி பொய் சொல்லி விடுகிறார்.

கோபியும் அதை நம்பி வீட்டிற்கு வந்து பாக்யாவிடம் பேசி சமரசம் செய்கிறார். அதாவது உன்னுடைய ஹோட்டலை சுதாகர் வாங்கவில்லை, வேறு ஒருவர்தான் வாங்குகிறார் என்று சொல்லி பாக்கியாவை நம்ப வைக்க முயற்சி எடுக்கிறார். ஆனால் பாக்யாவிற்கு மட்டும்தான் சுதாகர் எப்படிப்பட்டவர் எந்த மாதிரியான கேரக்டர் என்பது தெரியும். அதனால் பாக்கியம் எல்லோரிடமும் நீங்கள் அவரை எப்படி நம்புறீங்கன்னு எனக்கு தெரியல, ஆனா எனக்கு மட்டும்தான் அவரைப் பற்றி முழுமையாக தெரியும்.

அதனால் யாரும் அவருக்காக என்னிடம் வந்து சப்போர்ட் பண்ணி பேச வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். பிறகு பாக்யாவின் ஹோட்டலில் இருக்கும் பொருட்களை எடுத்துக்கொண்டு பாக்கிய ஹோட்டலை விட்டு வெளியேறுகிறார். இன்னொரு பக்கம் செல்வி, ஆகாஷ் எப்படியாவது கலெக்டர் ஆக வேண்டும் என்று கோச்சிங் கிளாஸ் சேர்த்து விட்டு இருக்கிறார்.

அதே நேரத்தில் பாக்யாவின் ஹோட்டலிலும் வேலை பார்க்க முடியாது என்பதால் ஆகாஷ் பார்ட் டைம் ஜாப் பண்ணுவதற்கும் தயாராகி விட்டார். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஆகாஷ் அவருடைய வெற்றியை கொடுத்து வருவதால் நிச்சயம் கலெக்டர் ஆகி விடுவார். அந்த சமயம் இனியாவின் மாமனார் மற்றும் குடும்பத்தை பற்றி கோபி குடும்பத்துக்கு தெரிய வந்த நிலையில் இனியா வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது என்று ஃபீல் பண்ணப் போகிறார்கள்.