கோபியை முட்டாளாக்கிய சுதாகர், நொந்து போன பாக்கியா.. அசால்ட்டாக இருக்கும் ஈஸ்வரி, புரிந்து கொள்ளாத இனியா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்யலட்சுமி சீரியலில், சுதாகர் ஏமாற்றியதை தாங்கிக் கொள்ள முடியாத பாக்கியம் வீட்டில் வந்து கோபி மற்றும் பசங்களிடம் புலம்புகிறார். ஆனால் பாக்கியாவின் புலம்பலை ஈஸ்வரி ஈசியாக எடுத்த நிலையில் கோபி மற்றும் செழியன் சுதாகரை சந்தித்து பேசிட்டு வருகிறோம் என்று கிளம்பிவிட்டார். அப்படி சுதாகர் வீட்டுக்கு போன நிலையில் சுதாகர் அப்படியே பேச்சை மாற்றி விட்டார்.

அதாவது பாக்யாவின் பெயரில் ஹோட்டல் இருந்தால் நிறைய பிரச்சனைகள் வந்துவிடும். அதனால் தான் இனியாவின் பெயருக்கு அந்த ஹோட்டலை மாற்றி எழுத சொன்னேன். நான் செய்த ஒரே தவறு பெயர் மாற்றும் பொழுது உங்களிடம் முன்கூட்டியே சொல்லி இருக்கணும். ஆனால் அதற்கு நேரம் எதுவும் இல்லாததால் நான் மாற்றி விட்டேன்.

மற்றபடி உங்களை ஏமாற்ற வேண்டும், ஹோட்டலை அபகரிக்க வேண்டும் என்ற எந்த எண்ணமும் என்னிடம் இல்லை. ஹோட்டல் இனியாவின் பெயரில் இருந்தாலும் அது பாக்யா நடத்தும் ஈஸ்வரி ரெஸ்டாரண்ட் ஆகத்தான் இருக்கும். அத்துடன் அங்கே வேலை பார்க்கும் ஆட்கள் வேலை பார்க்கட்டும் அதோடு சேர்ந்து என்னுடைய ஒரு சில ஆட்கள் வேலை பார்ப்பார்கள்.

எல்லாத்தையும் கவனிக்கும் பொறுப்பு பாக்யாவிடம் தான் இருக்கும் என்று சில கட்டுக் கதைகளை சொல்லி செழியினை நம்ப வைத்து கோபியை முட்டாள் ஆக்கிவிட்டார். உடனே கோபியும் சுதாகர் நல்லவர் என்று முடிவெடுத்து வீட்டிற்கு வந்து பாக்யாவிடம் சொல்கிறார். ஆனால் பாக்கிய தேவை இல்லாம சின்ன பிள்ளைகளை ஏமாற்றும் விதமாக என்னிடம் பொய் சொல்லி என்னை நம்ப வைக்க வேண்டாம்.

என்னுடைய ஹோட்டல் என் கையை விட்டு போய்விட்டது என்று எனக்கு நன்றாகவே தெரிந்து விட்டது. இதன் பிறகு என்ன பண்ணனும் எப்படி நான் மறுபடியும் மீண்டும் வரவேண்டும் என்று எனக்கு தெரியும். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி எல்லோருக்கும் கும்பிடு போட்டு ஹோட்டலுக்கு போய் விடுகிறார். அங்கே போனதும் செல்வியிடம் பேசுகிறார்.

உடனே செல்வி தன்னுடைய பையன் தடுமாறியதற்கு இனிய தான் காரணம் என்று நினைத்தாலும் அதை வெளியே சொல்ல முடியாமல் பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஆனாலும் பாக்கியாவை பார்த்து ஆறுதல் படுத்திவிட்டு என்னுடைய பையன் இடையில் தடுமாறினாலும் நிச்சயம் வளர்ந்து பெரியாளாக நிற்பான். அப்பொழுது எல்லோரும் கலெக்டர் அம்மா என்று சொல்லக்கூடிய காலம் வரும் என்று கெத்தாக சொல்கிறார்.

ஆனால் இவ்வளவு விஷயங்கள் நடந்தும் நம்மளை சுற்றி என்ன நடக்கிறது அம்மாவின் நிலமை என்னவென்று கொஞ்சம் கூட இனிய புரிந்து கொள்ளவில்லை. படிக்கும்போது தான் இனியா அப்படி இருந்தார் என்றால் இப்பொழுது ஒரு பத்திரிகையாளராகவும் வேலை பார்த்து பிரயோஜனம் இல்லை. ஒரு வீட்டுக்கு மருமகளாக போன பிறகு கூட மெச்சூரிட்டி இல்லை.

ஆனால் நிச்சயம் இனியாவின் காதுக்கு இந்த விஷயம் வந்து விட்டால் அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக கல்யாண வாழ்க்கை வேண்டாம் என்று முடிவு எடுத்து அந்த ஹோட்டலை திருப்பி பாக்யாவிற்கு எழுதிக் கொடுத்து விடுவார். ஏனென்றால் ஹோட்டலை அபகரிப்பதற்காகத்தான் இந்த கல்யாணம் நாடகம் என்று இனியா புரிந்து கொள்வார்.