பாக்யாவை நடுரோட்டில் நிற்க வைக்க சுதாகரின் அடுத்த பிளான்.. மக்குகளாக இருக்கும் கோபியின் குடும்பம்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், நம்பர் ஒன் கிரிமினலாக இருக்கும் சுதாகர், பாக்யாவை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார். பாக்கியாவிற்கும் சுதாகர் நம்மளை ஏமாற்ற தான் செய்கிறார் என்று தெரிந்தும் கோபி ஈஸ்வரி கொடுத்த டார்ச்சரால் தற்போது ரெஸ்டாரண்ட் இல்லாமல் போய்விட்டது.

அத்துடன் பாக்யாவிடம் ஒரு மாதிரியும் கோபி மற்றும் குடும்பத்திடம் வேற மாதிரியாகவும் பேசி இரட்டை வேஷம் போட்டு சுதாகர் நடித்து வருகிறார். இருந்தாலும் இந்த சுதாகர் இப்படித்தான் என புரிந்து கொண்ட பாக்கிய அந்த ரெஸ்டாரன்ட் போனால் போகட்டும் என ஒரு முடிவுக்கு வந்து விட்டார்.

இருந்தாலும் கடைசி ஒரு முறையாக அந்த ரெஸ்டாரண்டுக்கு போகலாம் என செல்வி பாக்கிய வந்த பொழுது அங்கே எழிலும் வந்து விட்டார். அந்த நேரத்தில் ரெஸ்டாரண்டுக்குள் இருந்த எல்லா பொருட்களையும் சுதாகர் ஆட்கள் வெளியே தூக்கி போடுகிறார்கள். அப்பொழுது பாக்கிய அவர்களிடம் என்னுடைய முக்கியமான பொருள் உள்ளே இருக்கிறது. அதை நான் எடுத்துக் கொண்டு போகிறேன் என கேட்கிறார்.

ஆனால் அதற்குள் இன்னொரு பக்கம் ரெஸ்டாரண்டுக்குள் இருந்த தாத்தாவின் போட்டோவை தூக்கி எறிந்து விட்டார்கள். இதை பார்த்த எழில் மற்றும் பாக்கிய கண்ணீர் வடித்துக் கொண்டு கோபப்பட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் பாக்கியா இங்கே பேசி பிரயோஜனம் இல்லை, பேச வேண்டிய இடத்தில் பேசி விட்டு வருகிறேன் என்று சுதாகர் ஆஃபீஸ்க்கு போய் விடுகிறார்.

அங்கே போனதும் வழக்கம் போல் சுதாகரிடம் சவால் விட்டு ரெஸ்டாரண்ட் போனா போகுதுன்னு விட்டு விட்டேன். ஆனால் இனியாவின் வாழ்க்கையில் ஒரு சின்ன பிரச்சனையும் இனியா கஷ்டப்படுகிறார் என்று தெரிந்தாலும் உன்னை நான் சும்மா விடமாட்டேன் என்று அதட்டி விட்டு போய் விடுகிறார்.

இதனால் கோபத்தில் இருக்கும் சுதாகர், பாக்யாவின் முதல் ரெஸ்டாரண்டை பற்றி விசாரிக்க சொல்கிறார். அப்படி விசாரித்து அவருடைய ஆட்கள் சொல்ல வந்தது என்னவென்றால் பாக்யா வைத்திருக்கும் ஹோட்டல் வாடகையில் தான் போய்க்கொண்டிருக்கிறது. அந்த ஹோட்டலில் ஓனர் தற்போது பண நெருக்கடியில் இருக்கிறார் என்று சொல்கிறார்.

உடனே இதை பயன்படுத்தி அந்த ஹோட்டலையும் புடுங்கி பாக்யாவை நடுரோட்டில் நிற்க வேண்டும் என்று சுதாகர் பிளான் பண்ணிவிட்டார். இப்படி சுதாகர் பாக்யாவை டார்ச்சர் செய்து கொண்டிருப்பதை தெரிந்தும் தெரியாமலும் கோபி குடும்பம் முட்டாளாகிய சுதாகரை கண்மூடித்தனமாக நம்பி பாக்யாவை நம்ப மாட்டுக்காங்க.