ஹிட் சீரியலின் கதையை முடிவுக்கு கொண்டு வரும் சன் டிவி.. 775 எபிசோடு தாண்டி வெற்றி நடை போடும் சீரியல்

Sun Tv Serial: சினிமாவை காட்டிலும் சின்ன திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களை தான் மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகிறார்கள். இதனால் தான் தொலைக்காட்சி நிறுவனங்கள் காலை முதல் இரவு வரை தொடர்ந்து பல சீரியல்களை ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். இதில் முதலிடத்தில் சன் டிவி சீரியல் தான் இருக்கிறது.

குடும்ப இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்த சன் டிவி சீரியல் பல ஹிட் சீரியல்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஹிட் சீரியல் ஒன்றை முடிப்பதற்காக கதையை அவசரம் அவசரமாக கொண்டு வருகிறார்கள். அதாவது இந்த சீரியல் ஒளிபரப்பாகி கிட்டத்தட்ட 775 எபிசோடு தாண்டி வெற்றி நடை போட்டு வருகிறது.

தினமும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியலின் கதை தற்போது சுவாரசியமாக போய்க்கொண்டிருக்கிறது. இதுவரை தன்னுடைய அம்மா யார் என்று தெரியாமல் இருந்த கௌதமுக்கு ரேவதி தான் உண்மையான அம்மா என்ற விஷயம் தெரிந்து விட்டது. அடுத்தபடியாக தன்னுடைய அப்பா யார் என்று ரேவதி அம்மாவிடம் கௌதம் கேள்வி கேட்கிறார்.

ஆனால் ரேவதி, அப்பா யார் என்ற உண்மையை சொல்லவில்லை என்பதால் கவுதம் ஜானுவிடம் போய் கேட்கிறார். ரேவதி தான் என்னுடைய அம்மா என்று எனக்கு தெரிந்து விட்டது. அதனால் என்னுடைய அப்பா யார் என்று ஜானுவிடம் கேட்கிறார். ஆனால் ஜானு மற்றும் பைரவிக்கு கௌதமியின் அப்பா யார் என்பது தெரியாது. இருந்தாலும் கௌதம் கண்டுபிடிப்பதற்கு முன் இலக்கியா கண்டுபிடித்துவிட்டார்.

அந்த வகையில் இன்னும் கூடிய சீக்கிரத்தில் எஸ்எஸ்கே தான் கௌதமின் அப்பா என்ற உண்மை அனைவருக்கும் தெரிய வரப்போகிறது. இதனை அடுத்து டிராமா போட்டு வரும் அஞ்சலி கதையும் முடிவுக்கு கொண்டு வந்து நாடகத்தை முடிப்பதற்கு சன் டிவி சேனல் தயாராகிவிட்டது.

இடையில் கதை தட்டு தடுமாறினாலும் தற்போது முடியும் தருவாயில் இருப்பதால் கதை கொஞ்சம் சுவாரசியமாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த நாடகத்தை முடித்துவிட்டு இதற்கு பதிலாக சாந்தி நிலையம் என்ற சீரியல் வரப்போகிறது.