தேவர்மகன் போல் கதையை கொண்டு வரும் சன் டிவி சீரியல்.. டிஆர்பி ரேட்டிங்கில் ஏற்படும் மாற்றம்

Sun Tv Serial: பழசுக்கு எப்போதுமே மவுஸ் அதிகம் என்று சொல்வது வழக்கம். அதனால் தான் படத்தில் கூட அந்த காலத்தில் ஹிட்டான காட்சிகள் மற்றும் பாடல்களை வைத்து தற்போது ஹிட் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் அப்புள்ள படங்களின் கதைகளை வைத்து இந்த காலத்துக்கு ஏற்ற மாதிரி சீரியல்களை கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.

இப்படித்தான் பிரியமானவளே படத்தின் கதையை வைத்து மகாநதி சீரியலையும், முத்து படத்தை வைத்து வேலைக்காரன் சீரியல் போன்ற பல படங்களின் கான்செப்ட் வைத்து சீரியலாக கொண்டு வந்து கொடுக்கிறார்கள். அதே மாதிரி தற்போது சன் டிவியில் தேவர்மகன் கதையைப் போல ஒரு சீரியல் வர ஆரம்பித்துவிட்டது.

அதாவது அன்னம் என்கிற சீரியலின் கதை அன்னத்தின் தாய் மாமன் அவருடைய மூத்த பிள்ளை சரவணனுக்கு தங்கச்சி மகள் அன்னத்தை கல்யாணம் பண்ணி வைக்க வேண்டும் என்று அனைத்து ஏற்பாட்டையும் பண்ணினார். ஆனால் இது பிடிக்காத செண்பகவல்லி கல்யாண மேடை வரும் வரை காத்திருக்க வைத்துவிட்டு பையனை யாருக்கும் தெரியாமல் ஓட வைத்து விடுகிறார்.

இதனால் கேள்விக்குறியான அன்னத்தின் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக தாய்மாமன் கார்த்திகை தாலி கட்ட வைத்து விடுகிறார். ஆனால் கார்த்திக் ரம்யாவை உசுருக்கு உசுராக காதலித்து வரும் நிலையில் அப்பா சொல்வதை தட்ட முடியாமல் அன்னத்தின் கழுத்தில் தாலி கட்டி விடுகிறார். தற்போது ஊருக்கு வரும் ரம்யாவிற்கு கார்த்திக்கும் அன்னத்துக்கும் கல்யாணம் ஆகிவிட்டது என்று தெரிந்து விட்டது.

இதனால் ரம்யா எடுக்கப் போக முடிவு என்னவாக இருக்கும், கார்த்திக் எப்படி ரம்யாவை சமாளித்து அன்னத்துடன் வாழ்கிறார் என்பது தான் கதையாக இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட இந்த கதை அப்படியே தேவர் மகன் போல் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த வாரம் ஆறாவது இடத்தில் இருக்கிறது.