பழையபடி டிஆர்பி- யில் டம்மியான சன் டிவி சீரியல்.. இதுக்கு ஒரு எண்டே இல்லையா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான் மக்களின் பொழுதுபோக்காக இருந்தது. ஆனால் இதையே ஓவர் டேக் பண்ணும் விதமாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் மக்களை கவர்ந்து வருகிறது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக சன் டிவி சீரியல் அடி வாங்கிக் கொண்டே வருகிறது.

அந்த வகையில் ஒரு சில சீரியல்களை பார்ப்பதற்கு கொஞ்சம் கூட பிரயோஜனமே இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப மக்கள் வெறுப்பை கொட்டி வருகிறார்கள். அதிலும் அந்த சீரியல்களை பிரைம் டைமிங்கில் போட்டு கடுப்பேற்றி வருவதால் இதெல்லாம் முடித்துவிட்டு தயவு செய்து வேறு சீரியல்களை கொண்டு வாங்க என்று மக்கள் கமெண்ட்ஸ் மூலம் கதறி வருகிறார்கள்.

அந்த வகையில் கயல் மற்றும் எதிர்நீச்சல் 2 போன்ற இரண்டு சீரியல்களும் டம்மி ஆகிக்கொண்டே வருகிறது. இதில் எதிர்நீச்சல் 2 சீரியல் கடந்த இரண்டு வாரங்களாக முன்னேறிக் கொண்டு வந்த நிலையில் பழையபடி டம்மியாக போகிறது என்பதற்கு ஏற்ப இந்த வார கதை ரொம்பவே அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது.

பார்க்கவியை குணசேகரனுக்கு எதிராக அந்த வீட்டிற்கு கூட்டிட்டு வந்த மருமகள்கள், அறிவுக்கரசிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் பார்க்கவிக்கு நியாயம் வேண்டும் என்ற அர்த்தத்தில் தர்ஷனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணினார்கள். ஆனால் இந்த தர்ஷன் இடையில் பல குளறுபடிகளை ஏற்படுத்தியதால் குணசேகரன் பிளான் பண்ணி பார்க்கவியை வீட்டை விட்டு அனுப்பிவிட்டார்.

தற்போது வரை குணசேகரன் அறிவுக்கரசி மட்டுமே ஜெயித்துக் கொண்டே வருவதால் சம்பந்தமே இல்லாமல் கதைகள் நகர்ந்து கொண்டு வருகிறது. எதிர்நீச்சல் சீரியலில் கல்யாண கதையை தவிர வேற எந்த ட்ராக்கும் தெரியாத. ஆரம்பித்ததிலிருந்து இப்பொழுது வரை யாருக்காவது கல்யாணம் சடங்கு என்று அந்த விஷயத்தை வைத்து உருட்டிக் கொண்டு பார்ப்பவர்களுக்கு பிபி பிரஷர் எல்லாத்தையும் ஏத்தும் வகையில் கதை மோசமாக இருக்கிறது. இதற்கு ஒரு எண்டே இல்லையா என்று கேட்கும் அளவிற்கு டம்மி ஆகிவிட்டது.