Serial: சன் டிவியில் சீரியலுக்கு பஞ்சமே இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப 18 சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் புதிதாக வந்த ஆடுகளம் சீரியலில் டெலினா டேவிஸ் மற்றும் சல்மான் நடித்து வருகிறார்கள்.
இந்த சீரியல் மக்கள் மனதை கொஞ்சம் கொஞ்சமாக கவர்ந்த நிலையில் இன்னொரு சீரியல் புதுசாக வரப்போகிறது. வரப்போற சீரியலுக்கு ஆரம்பத்தில் செல்லமே என்ற டைட்டில் வைக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த டைட்டிலை தூக்கி விட்டு தங்க மீன்கள் என வைத்து இருக்கிறார்கள்.
இதில் நடிக்கப் போகும் நடிகர்கள் யார் என்றால் சுந்தரி சீரியலில் ஹீரோ மற்றும் வில்லனாக நடித்து வந்த கார்த்திக் என்கிற ஜிஸ்ணுமேனன் மற்றும் ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி சீரியலில் முன்னணி கதாநாயகியாக நடித்த ரேஷ்மா இணைந்து நடிக்க போகும் சீரியல் தான் தங்கமீன்கள்.
மேலும் சுந்தரி சீரியலில் கார்த்திக் மகளாக நடித்து வந்த தமிழ் பாப்பாவும் இணைந்து இருக்கிறார். இந்த சீரியலும் பிரைம் டைமிங்ள் தான் ஒளிபரப்பாக வேண்டும் என்பதற்காக தற்போது ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்த சீரியலை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் கயல் சீரியல் முடிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல் வெளிவந்திருக்கிறது. அதற்கு பதிலாக தங்கமீன்கள் கூடிய சீக்கிரத்தில் வரப்போகிறது.