Sun Tv Serial: வீட்டில் இருந்தபடியே தினமும் பார்த்து நேரத்தை போக்கும் விதமாக இல்லத்தரசிகளின் பொழுதுபோக்காக இருப்பது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான். அதனால் தான் தொலைக்காட்சி சேனல்கள் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்பு செய்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவிக்கு தான் முதலிடம் என்பதற்கு ஏற்ப சன் டிவியில் உள்ள சீரியல்கள் தான் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது.
அடுத்தபடியாக விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல்களும் தற்போது சன் டிவிக்கு ஈடாக சீரியலை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள் பல வருஷங்களாக போய்க் கொண்டிருந்தாலும் அதை முடிக்காமல் இழுத்து அடிப்பதால் கொஞ்சம் தடுமாறி வருகிறது. அந்த வகையில் இப்போதைக்கு கயல் சீரியலுக்கு எண்டு கார்டு இல்லை என்பதற்கு ஏற்ப கதை நகர்ந்து கொண்டு வருகிறது.
இதையெல்லாம் சரி செய்யும் விதமாக சன் டிவியில் அடுத்து முக்கோண காதலை மையமாக வைத்து புதுசாக ஒரு சீரியல் வரப்போகிறது. அதாவது இரு மலர்கள் என்ற டைட்டிலுடன் ரஞ்சனி சீரியலில் ஹீரோயினாக வந்த ஜீவிதா மற்றும் இலக்கியா சீரியலில் ஆரம்பத்தில் இலக்கியா கேரக்டரில் நடித்து வந்த ஹீமா பிந்து என்பவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இவர்களுக்கு ஜோடியாக ரஞ்சனி சீரியலில் கதாநாயகனாக நடித்த சந்தோஷ் ஹீரோவாக இணைந்திருக்கிறார். இந்த சீரியல் பற்றி ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தாலும் இன்னும் ஒளிபரப்பாமல் இருப்பதற்கு ப்ரைம் டைமிங்கில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இன்னும் கூடிய சீக்கிரத்தில் இந்த நாடகத்தை சன் டிவியில் கொண்டு வந்து விடுவார்கள்.