புத்தம் புது சீரியலில் களமிறங்கும் சுந்தரி சீரியலின் கதாநாயகன்.. ஜீ தமிழ் ஹீரோயின்களை கொத்தாக தூக்கிய சன் டிவி

Sun Tv New Serial: என்னதான் முன்னணி ஹீரோக்கள் நடித்த பெரிய படங்கள் திரையரங்குகளில் வந்திருந்தாலும் தினமும் வீட்டில் இருந்து பார்க்கக்கூடிய அளவிற்கு சின்னத்திரை சீரியல்கள் தான் மக்களை அதிக அளவில் கவர்ந்திருக்கிறது. அதிலும் இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கே இந்த சீரியல் தான் என்று சொல்வதற்கு ஏற்ப எக்கச்சக்கமான சீரியல்கள் இருக்கிறது. அந்த வகையில் சன் டிவியில் உள்ள சீரியல்கள் தான் மக்களை அதிகமாக கவர்ந்திருக்கிறது.

அதனால் சன் டிவியில் காலையில் மாலையில் என மொத்தமாக 18 சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாலையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் எப்பொழுதுமே பேராதரவு கொடுத்து வருகிறார்கள். அதனால் தான் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்து சன் டிவி முதல் இடத்தில் இருக்கிறது. அப்படி மாலையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சுந்தரி சீரியல் டாப் 5 இடத்தை பிடித்திருக்கிறது.

அத்துடன் 1120 எபிசோடுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் தற்போது கிளைமாக்ஸ் நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இதில் கார்த்திக் என்கிற ஜிஷ்ணு வில்லன் கதாபாத்திரத்தில் நெகட்டிவ்வாக நடித்திருந்தாலும் இவருடைய நடிப்பு மக்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. அதனால் இந்த நாடகம் முடிந்த பிறகு மறுபடியும் புத்தம் புது சீரியலில் கதாநாயகனாக பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

அந்த வகையில் ராகவி என்னும் சீரியலில் களமிறங்கி இருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ஜீ தமிழில் உள்ள இரண்டு கதாநாயகிகள் தற்போது சன் டிவியில் முதல் முறையாக எண்டரி கொடுக்கப் போகிறார்கள். தேஜஸ்வினி, இவர் கன்னடம் தெலுங்கு மற்றும் தமிழ் சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். விஜய் டிவியில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்கிற தொடரில் வினோத் பாப்புக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு ஜீ தமிழில் வித்யா நம்பர் ஒன் என்கிற சீரியலில் நடித்திருக்கிறார்.

அடுத்ததாக கண்மணி, இவர் அமுதாவும் அன்னலட்சுமி என்கிற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஹீரோயின். இவரும் ராகவி சீரியலில் கமிட்டாகி இருக்கிறார். இந்த நாடகம் கூடிய விரைவில் சன் டிவியில் பிரேம் டைமிங் ஒளிபரப்பாக போகிறது. இதற்கு பதிலாக கயல் சீரியல் முடிவடைய போகிறது.

Leave a Comment