சோழன் மீது நிலாவுக்கு வந்த சந்தேகம்.. டிமிக்கி கொடுக்கும் சேரனின் தம்பி

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலாவை சந்தித்து பேசும் நிலாவின் அண்ணி, உண்மையிலேயே நீ சோழனை லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணியா? உங்களுக்குள் எப்ப லவ் வந்தது எனக்கு தெரியாமல் என்று கேட்கிறார். அதற்கு நிலா, எனக்கும் சோழனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நாங்கள் காதலித்து கல்யாணம் பண்ணவில்லை, சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் எங்களுடைய கல்யாணம் நடந்தது என்று எல்லா விஷயத்தையும் அண்ணியிடம் சொல்லி விடுகிறார். உடனே நிலாவின் அண்ணி, நீ என்னதான் சொன்னாலும் சட்டப்படியாகவும் ஊர் காரங்களுக்கு முன்னும் நீயும் சோழனும் கணவன் மனைவியாகத்தான் இருப்பீங்க.

இதிலிருந்து நீ வெளியே வரவேண்டும் என்றால் சட்டப்படியாக விவாகரத்து வாங்க வேண்டும். இது உனக்கு மட்டுமில்லை சோழனுக்கும் சரியாக இருக்கும். ஏனென்றால் சோழனுக்கு கல்யாணம் நடக்கும் போது இது ஒரு பிரச்சனையாக நிற்கும் என்று சொல்கிறார். உடனே நிலாவும் ஆமாம் அண்ணி, நான் இதைப் பற்றி யோசிக்கவே இல்லையே என்று சொல்லி விவாகரத்துக்கு முடிவு பண்ணி விட்டார்.

அந்த வகையில் குழப்பத்துடன் வீட்டிற்கு வந்த நிலா தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது கனவில் சோழனிடம் விவாகரத்து கேட்பதாகவும் அதற்கு சோழன் தர மாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பது போலும் கனவு காண்கிறார். இதனால் பயந்து போன நிலா, இப்பொழுதே சோழனிடம் பேச வேண்டும் என்று தனியாக கூட்டிட்டு போகிறார்.

அப்படி நிலா கூப்பிட்டதும் சோழன் போன நிலையில் நம்முடைய கல்யாணம் ஒரு பொம்மை கல்யாணம் தான் என்றாலும் சட்டப்படி நம் இருவரும் பிரிய வேண்டும். அதற்கு நாம் விவாகரத்து பண்ண வேண்டும் என்று சொல்லி விடுகிறார். உடனே இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் சோழன் சரி என்று சொல்லிவிடுகிறார்.

ஆனால் மறுநாள் காலையில் இது சம்பந்தமாக சோழனை பார்த்து பேசிய நிலா கையோடு வக்கிலே பார்த்து பேசுவதற்கு கூட்டிட்டு போகிறார். அங்கே வக்கீல் சில கேள்விகளை கேட்டதும் மனப்பூர்வமாக ரெண்டு பேரும் பிரிவதற்கு சம்மதம் என்று நிலா சொல்கிறார்.

உடனே இரண்டு பேருடைய ஆதார் கார்டு வேண்டும் என்று வக்கீல் கேட்கிறார். அதற்கு சோழன் என்னுடைய ஆதார் கார்டு மட்டும் இருக்கிறது என்று சொல்லி நிலவின் ஆதார் கார்டு இல்லை என சொல்கிறார். அப்பொழுது வக்கீல் உங்களுடைய ஆதார் கார்டு இல்லாமல் எப்படி சட்டபூர்வமாக பதிய முடிந்தது என்று கேள்வி கேட்கிறார்.

அதன் பிறகு தான் நிலாவுக்கு புரிகிறது, ஆமா சட்டப்படி பதிந்திருக்க வேண்டும் என்றால் என்னுடைய ஆதார் கார்டு கொடுத்திருக்க வேண்டும். அப்படி என்றால் என்னுடைய ஆதார் கார்டு எப்படி அவங்களுக்கு கிடைத்தது என்று சோழன் மீது சந்தேகப்பட்டு கேட்கிறார்.

அந்த வகையில் சோழன் மீது சந்தேக படும் நிலாவுக்கு உண்மையிலே சோழன் நம் மீது ஆசைப்பட்டு தான் கல்யாணம் பண்ணி இருக்கிறாரோ என்ற சந்தேகம் கூடிய சீக்கிரத்தில் வரப்போகிறது. ஆனாலும் எல்லா விஷயத்திலும் பொய் சொல்லி நிலாவுக்கு டிமிக்கி கொடுக்கும் சோழன் இனி அடுத்து எப்படி நிலாவை சமாளிக்க போகிறார் என்பது தெரியவில்லை.

நிலாவும் சோழனும் விரும்பி கல்யாணம் பண்ணவில்லை என்று சேரனுக்கு மட்டும்தான் தெரியும். அந்த வகையில் நிலா வீட்டை விட்டு போனால் கூட சேரனுக்கு பெருசாக பாதிப்பு இருக்காது. ஆனால் பல்லவன் மற்றும் பாண்டியன் தான் பாவமாக நிற்கப் போகிறார்கள்.