விஜய் தொலைக்காட்சியில் இன்று சின்ன மருமகள் சீரியல் ஸ்பெஷல் எபிசோட் ஒன்றரை மணி நேரம் ஒளிப்பரப்பானது.
சேதுவிற்கும், தமிழுக்கும் ஏற்பட்ட மோதலால் சேது தனியாக சமைத்து சாப்பிட ஆரம்பிக்கிறான். அவன் சமைத்த சாப்பாடு ருசி இல்லை என்று தமிழுக்கு தெரிய வரவும் தான் சமைத்த சாப்பாடை சேதுவிற்கு தெரியாமல் வைத்து விடுகிறாள். சேது அதை சாப்பிட்டு விட்டு பரவாயில்லையே நாமும் நல்லா தான் சமைக்கிறோம் என்று நினைத்து கொள் கிறான்.
ராஜாங்கம் வீட்டில் ஈஸ்வரி கண்மணியை பொண்ணு பார்க்க வர சொல்லியிருக்கிறாள். ஈஸ்வரி நல்லது செய்கிறாள் என்று ராஜாங்கம் நினைக்கிறார். ஆனால் ஈஸ்வரியோ மாப்பிள்ளை அம்மாவிடம் கண்மணியை ராஜாங்கம் வீட்டு சொத்துகாக கல்யாணம் செஞ்சுகோங்க. பிறகு உங்க பையனுக்கு இன்னொரு கல்யாணம் செஞ்சுகோங்க என்று சொல்கிறாள்.
அது மட்டுமல்லாமல் நீங்க அந்த சொத்திலிருந்து 25% எனக்கு தர வேண்டும் என்று பேரம் பேசுகிறாள்.மாப்பிள்ளை அம்மாவோ இந்த கல்யாணம் மட்டும் நடந்தால் மட்டும் போதும் 30% சொத்தே உங்களுக்கு தருகிறேன் என் கிறாள். இதை கேட்ட சாவித்திரி மட்டும் சும்மாவா இருப்பாள் அவளும் அவள் பங்குக்கு ஒரு மாப்பிள்ளையை 50% சொத்து நீங்க எனக்கு தரணும் என்று அவளும் பேரம் பேசி அழைத்து வருகிறாள்.
பாட்டியும், ஆறுமுகமும் பேசி கொண்டிருக்கும் போது பாட்டி திடீரென்று பேச்சு முச்சு இல்லாமல் மயங்கி விழுகிறாள். அதை பார்த்து ஆறுமுகம் பயந்து வீட்டில் உள்ள எல்லாரையும் அழைக்கிறான். ராஜாங்கம் அம்மாவை தூக்குங்க ஹாஸ்பிடலுக்கு போலாம் என்று சொல்லவும், தமிழ் அதுக்கெல்லாம் இப்போ டைம் இல்லை நான் பாட்டிக்கு என்னாச்சு பார்க்கிறேன் என்று சொல்ல சாவித்திரியோ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீ எங்க மேல உள்ள கோபத்தால் எங்க அம்மாவை ஏதாவது செஞ்சுருவ என்று சொல்கிறாள்.
ஆனால் தமிழ் அவங்கள எல்லாம் எதிர்த்து பாட்டியை காப்பாத்துகிறாள். பாட்டியும் கண்ணை திறந்து பார்த்து எல்லோரிடமும் பேசுகிறார். சேது டாக்டரை அழைத்து வர டாக்டரும் பாட்டியை செக் செய்து பார்த்து பாட்டிக்கு ஒன்னுமில்லை யாரு பாட்டிக்கு முதலுதவி செய்தா என்று கேட்டு தமிழை பாராட்டுகிறார். உடனே ராஜாங்கமும் தமிழ் கிட்ட அம்மாவை காப்பாத்தி தந்துவிட்டாய் உனக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று தெரியல என்று நன்றி சொல்கிறான்.
ராஜாங்கம் எப்பவும் வீட்டிலிருந்த பெண்களை படிக்க போக கூடாது என்று சொல்வார். ஆனால் இப்ப தமிழ் டாக்டருக்கு படிக்கிறதனால் தான் நம்ம அம்மா உயிரை காப்பாத்தியிருக்கா என்று அவர் செய்த தவறை உணர்கிறார். இப்படி கொஞ்ச கொஞ்சமா தமிழ் எல்லோருடைய மனதையும் மாத்தி கடைசியில் சேதுவோட மனசுலயும் இடம்பிடித்து வீட்டிற்குள் வருவாளா? இல்லையா என்பது இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்