தீவிரவாதிகளால் பதட்டத்தில் நர்சுகள்.. பல்ஸ் கூட பிடிக்கத் தெரியாத பாரதி செய்யப்போகும் ஆப்பரேஷன்

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதி முதன்மை மருத்துவராக பணிபுரியும் விக்ரம் பாபு மருத்துவமனையை தற்போது தீவிரவாதிகள் முற்றுகையிட்டுள்ளனர். அங்கு சென்ட்ரல் மினிஸ்டர் ஒருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவிரவாதிகள், அரசாங்கம் தங்களுடைய 4 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே அப்பாவி மக்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருக்கின்றனர். மேலும் திடீரென்று சென்ட்ரல் மினிஸ்டருக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக பாரதியை மருத்துவமனைக்குள் வர வைக்கப்படுகிறார்.

மேலும் பாரதியுடன் வரும் நர்ஸ் ஒருவரை தீவிரவாதிகள் பாலியல் பலாத்காரம் செய்து கதற விடுகின்றனர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டு சகித்துக்கொள்ள முடியாத பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் தீவிரவாதிகளுடன் வாதிடுகின்றனர்.

அதன் பிறகு பாரதியை சென்ட்ரல் மினிஸ்டரின் அறுவை சிகிச்சைக்காக உள்ளே வர வைத்ததால், அந்த ஆபரேஷன் மட்டும் தோல்வி அடைந்தால் பாரதியின் இரண்டு மகள்களான லஷ்மி மற்றும் ஹேமா இருவரையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார்கள்.

ஒருகட்டத்தில் சென்ட்ரல் மினிஸ்டரின் உடல்நிலை கவலைக்கிடம் ஆகிறது. உடனே ஆபரேஷன் தியேட்டரில் இருக்கும் தீவிரவாதி குழந்தைகள் இருவரில் ஒருவரை கொன்று விடும்படி சொல்கிறார். இப்படி பரபரப்பான சூழ்நிலை பாரதிகண்ணம்மா சீரியலில் ஒளிபரப்பாகிறது.

நெல்சன் இயக்கத்தின் தளபதி விஜய் நடித்த பீஸ்ட்  படத்தை அப்படியே காப்பி அடித்து ஓடிக்கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா சீரியலில், ‘பாரதிக்கு ஒழுங்கா பல்ஸ் பிடித்துப் பார்க்க கூட தெரியாது. இதுல அவரு ஹார்ட்  ஆபரேஷன் செய்கிறாராம்’ என நெட்டிசன்கள் இந்த சீரியலை பங்கம் செய்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →