Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் ஆசைப்பட்டான் என்ற ஒரு காரணத்திற்காக ராஜி நடனப் போட்டியில் கலந்து எப்படியாவது இரண்டாவது பரிசை பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்காக கோமதியையும் சமாளித்து வீட்டில் நடந்த பிரச்சினையும் தாண்டி ஒரு வழியாக இரண்டாம் பரிசு வென்று விட்டார்.
ஆனால் ராஜி முதல் பரிசு கிடைக்கக்கூடாது என்பதற்காக டான்ஸ் மறந்தது போல் ஒரு இடத்தில் நின்று விட்டார். அதனால் தான் ராஜிக்கு முதல் பரிசு கிடைக்காமல் இரண்டாவது பரிசு கிடைத்தது. இதைக் கேள்விப்பட்டதும் ராஜி அதிக அளவில் சந்தோஷப்பட்டு விட்டார். இதை பார்த்த கோமதி மற்றும் கதிர் என்ன ஆச்சு ஏன் ரெண்டாவது பரிசுக்கு இந்த அளவுக்கு சந்தோசப்படுகிறார் என்று கேட்கிறார்கள்.
ஆரம்பத்தில் கதிருக்கு புரியவில்லை என்றாலும் அந்த பைக் பரிசை வாங்கியதும் இந்த பைக்குதான ராஜி நமக்கு வாங்கி தருவதாக சொல்லி இருந்தார். தற்போது இதற்காகத்தான் ராஜி இவ்ளோ ரிஸ்க் எடுத்து இருக்கிறார் என்பதை கதிர் புரிந்து கொண்டார். அந்த வகையில் ஒரு வழியாக கட்டாய கல்யாணத்தின்படி இருந்த இவர்களுடைய மனசு இரண்டுமே தற்போது ஒத்துப் போய்விட்டது.
அடுத்ததாக ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று ஒரு சொலவடை உண்டு. அதன்படி பாக்கியம், தங்கமயிலுக்கு கல்யாணத்தை பண்ணி வைப்பதற்காக பல பொய்களை சொல்லி பாண்டியன் வீட்டிற்கு மருமகளாக அனுப்பி வைத்துவிட்டார். ஆனால் அனுப்பிய பிறகு ஒவ்வொரு நாளும் தங்கமயில் அங்கே நெருப்பு மேல் நிற்பது போல் தான் அவஸ்தைப்பட்டு வருகிறார்.
உண்மையை மறைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் தங்கமயில் அந்த குடும்பத்தில் இருப்பவர்களை சமாளித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் தங்கமயிலே வேலைக்கு போக வேண்டும் என்று வற்புறுத்தி வருவதால் சர்டிபிகேட் ரொம்பவே அவசியமாக தேவைப்படுகிறது.
அதனால் சரவணன், தங்கமயில் இடம் சர்டிபிகேட் வாங்கித் தருகிறேன் அதற்கு உன்னுடைய விவரங்களை கொடு என்று கேட்டு டார்ச்சர் பண்ண ஆரம்பித்து விட்டார். இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் தங்கமயில் அவஸ்தைப்பட்டு நிம்மதி இல்லாமல் தவித்து வருகிறார்.