The actress left the Mahanadhi serial: விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் ஆனா மகாநதி சீரியல் தற்போது விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிறது. இதில் காவிரி- விஜய் இருவருக்கும் திடீரென திருமணம் நிகழ்ந்து, இப்போது ரிசப்ஷன் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த சமயத்தில் பசுபதி திடீரென என என்ட்ரி கொடுத்து நிவின்- காவிரி இருவரின் காதல் விஷயத்தை அம்பலப்படுத்துகிறார். ஏற்கனவே விஜய் தன்னுடைய காதலியை இழந்த வேதனையில் இருப்பது போல் தெரிகிறது. இதன் பின் நிவின்- காவேரி இருவரின் காதலை சேர்த்து வைப்பாரா என சின்னத்திரை ரசிகர்கள் இந்த சீரியலை ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.
இந்நிலையில் மகாநதி சீரியலில் மூத்த அக்காவான கங்கா கேரக்டரில் நடிக்கும் பிரதீபா அதிரடியாக சீரியலில் இருந்து விலகி விட்டார். அவருக்கு பதில் பாக்கியலட்சுமி சீரியலில் மூத்த மருமகளான ஜெனி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் திவ்யா கணேஷ் இனிவரும் நாட்களில் மகாநதி சீரியலில் கங்காவாக நடிக்கப் போகிறார்.
மகாநதி சீரியலில் கங்காவிற்கு பதில் பாக்யாவின் மருமகள்
இந்த கேரக்டருக்கு ஜெனி கச்சிதமாக பொருந்துவார். ஏனென்றால் கங்கா கேரக்டர் எந்த அடாவடியும் செய்யாமல் சைலன்டாக இருக்கக்கூடிய கதாபாத்திரம் தான். ஏற்கனவே பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்த திவ்யா கணேசன் மகாநதி சீரியலிலும் கங்காவாக நடித்த கலக்கப்போகிறார்.
மேலும் சமீப காலமாகவே பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாபாத்திரமும் டல் அடிக்கிறது. அவருக்கு மிகக் குறைந்த சீன்கள் மட்டுமே பாக்கியலட்சுமி சீரியலில் கிடைக்கிறது. இந்த சமயத்தை சரியாக பயன்படுத்தி திவ்யா கணேஷ் அடுத்து சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பை கப்புனு பிடித்துக் கொண்டார்.