Biggboss: விஜய் டிவியில் தற்போது புதுப்புது சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி போன்ற சீரியல்களுக்கு தான் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் பாரதி கண்ணம்மா சீரியல் கலாய்க்கப்பட்டாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் இதன் முதல் சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து உடனே இரண்டாவது பாகத்தையும் விஜய் டிவி ஒளிபரப்பியது. ஆனால் முதல் பாகம் அளவுக்கு இரண்டாம் பாகம் ரசிகர்களை கவர தவறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதனாலேயே தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வந்துள்ளது.
அந்த வகையில் ஊத்தி மூடப்பட்ட இந்த சீரியலால் வில்லி நடிகை ஒருவர் பிக்பாஸிடம் தஞ்சம் அடைந்துள்ளார். அதாவது பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா என்ற கதாபாத்திரத்தில் கலக்கியவர் தான் ஃபரீனா. கண்களை உருட்டி, டெரர் வசனம் பேசி நடிக்கும் இவருடைய ஆக்டிங் ரசிகர்கள் மத்தியில் வெகு பிரபலம்.
அதனாலேயே இரண்டாம் பாகத்திலும் இவருடைய நடிப்பை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் இவர் பிக்பாஸ் சீசன் 7ல் என்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி விரைவில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாக இருக்கிறது.
அதில் கலந்து கொள்ள பிக் பாஸ் டீம் விஜய் டிவி பிரபலங்கள் உட்பட பலருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதில் ஃபரீனா உடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு இருக்கிறதாம். இவரை வைத்தே நிகழ்ச்சியின் டிஆர்பி யை எகிற வைக்கவும் விஜய் டிவி பிளான் போட்டிருக்கிறது.
எப்படி என்றால் கடந்த சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் யாராவது ஒருவர் கைக்குழந்தையை விட்டு விட்டு வந்த பிரபலமாக தான் இருந்தார்கள். அதுவே நிகழ்ச்சியில் ஒரு சென்டிமென்டை உருவாக்கி வெற்றியடைய செய்தது. அதன் வரிசையிலேயே இப்போது கைக்குழந்தை வைத்திருக்கும் ஃபரீனாவும் இடம் பிடித்துள்ளார். இது எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.