வீரா சீரியலில் விஜியை விட வில்லியாக மாறிய அத்தை.. பிருந்தாவை காணாமல் தினரும் வீரா குடும்பம்

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், கார்த்திக் பிருந்தா கழுத்தில் தாலி கட்டியதற்கு வீராவும் சப்போர்ட் பண்ணி இருக்கிறார் என்று நினைக்கும் வள்ளி கொஞ்சம் கொஞ்சமாக வீரா குடும்பத்திற்கு எதிராக மாறிக் கொண்டு வருகிறார். அதிலும் ராமச்சந்திரன் வீட்டுக்குள் புகுந்திருக்கும் விஜியை கண்மூடித்தனமாக நம்பி வீரா குடும்பத்தை அவமானப்படுத்துகிறார்.

இதெல்லாம் போதாது என்று கார்த்திக், பிருந்தாவுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கடுப்பான விஜி, பிருந்தாவை கடத்தி தண்ணீர் தொட்டிக்குள் போட்டு விட்டார். பிருந்தாவை காணவில்லை என்று வீரா வீடு முழுவதும் தேடிய நிலையில் வீராவின் அம்மாவுக்கும் தன் மகள் பிருந்தா காணவில்லை என்று விஷயம் தெரிந்து விட்டது.

உடனே ராமச்சந்திரன் வீட்டிற்கு வந்து மகளைப் பற்றி கேட்கிறார். அப்பொழுது கார்த்திக், இதற்கெல்லாம் காரணம் இந்த விஜி தான் என்று விஜி மீது கோபப்படும் பொழுது குறுக்கே புகுந்த வள்ளி, விஜிக்கு சப்போர்ட் பண்ணி பேசி வீராவின் குடும்பத்தை திட்டி வீராவின் அம்மாவையும் அசிங்கப்படுத்தி விட்டார்.

இதனால் கண்மணி மற்றும் வீரா இருவருமே வள்ளி மீது எரிச்சல் படும் அளவிற்கு கோபமாகத்தான் இருக்கிறார்கள். இதற்கு இந்த விஜியை பரவாயில்லை என்பதற்கு என்ன வள்ளி கொஞ்சம் கொஞ்சமாக வில்லியாக மாறிக்கொண்டு வருகிறார்.

ஆனால் கடைசிவரை பிருந்தா எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு விஜி செய்த சதியால் வீராவின் குடும்பம் தெனறுகிறது. இதில் வேறு விஜி, வள்ளியை கைக்குள் போட்டுக்கிட்டு ராமச்சந்திரன் குடும்பத்தை ஆட்டிப்படைக்கிறார்.