Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியாவிற்கு நித்திஷ் உடன் கல்யாணமான நிலையில் புகுந்த வீட்டிற்கு இனியாவை விடுவதற்கு ஜெனி மற்றும் செழியன் போயிருக்கிறார்கள். அங்குள்ள சடங்கு சம்பிரதாயங்களை முடித்துவிட்டு இனியாவிடம் குட் பாய் சொல்லி செழியன் ஜெனி கிளம்பி விடுகிறார்கள்.
புதிதாக இருக்கும் கணவர் வீட்டில் இனியா கொஞ்சம் பதட்டத்துடனே இருக்கிறார். பிறகு அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது இனியாவுக்கு எழில் கால் பண்ணி பேசுகிறார். எழில் பேசி முடித்தவுடன் செழியன் போன் பண்ணி பேசுகிறார், அடுத்து கோபி மற்றும் ஈஸ்வரி என அனைவரும் இனியாவிடம் பேசுகிறார்கள்.
இதை பார்த்த சுதாகர், இனியாவிடம் உன் மேல் உன் குடும்பத்தில் இருப்பவர்கள் ரொம்ப பாசம் வைத்து இருப்பார்கள் போல என்று கேட்கிறார். இனியாவும் ஆமாம் என்று சொல்லிய நிலையில் இதை வைத்து சுதாகர் அடுத்த பிளான் பண்ண ஆரம்பித்து விட்டார். அதாவது பாக்யா வழக்கம்போல் ஈஸ்வரி ரெஸ்டாரண்டுக்கு வந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அங்கே வந்த சுதாகர், பாக்யாவை பார்த்து இனி இந்த ஹோட்டலுக்கும் பாக்கியலட்சுமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது முழுக்க முழுக்க எஸ் எஸ் கீழே தான் நடக்கப்போகிறது. அந்த வகையில் இந்த ஹோட்டலை இனியாவிற்கு நீங்கள் அன்பளிப்பாக கொடுத்து விட்டீர்கள் என்று சொல்லி பத்திரத்தை காட்டுகிறார்.
உடனே பாக்கியம் நான் அப்படி எதுவும் சொல்லவில்லை நீங்கள் என்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கி இருக்கிறீர்கள் என்று கோபப்பட்டு பேசுகிறார். அதற்கு சுதாகர் ஆரம்பத்தில் இந்த ஹோட்டலை வாங்க வேண்டும் என்று உங்களிடம் எவ்வளவோ டீல் பேசினேன். ஆனால் எதற்கும் அசராமல் இருந்த உங்களை மடக்குவதற்கு உங்கள் மகள் இனியவை நான் பயன்படுத்திக் கொண்டேன்.
இப்பொழுது ஒரு பைசா செலவில்லாமல் நான் நினைத்தபடி இந்த ஹோட்டல் கிடைத்துவிட்டது என்று சொல்லி பாக்கியாவை ஹோட்டலில் விட்டு வெளியே அனுப்பி விட்டார். பாக்யா இதைப் பற்றி வீட்டில் சொல்வதற்கு வந்த பொழுது அதற்கு முன்னே இனியா, நித்தேஷ் மற்றும் மாமியார் என அனைவரும் பாக்யா வீட்டிற்கு வந்து விட்டார்கள். பாக்யாவை பார்த்ததும் இனியா அரவணைத்து அன்பை காட்டி விடுகிறார்.
இதனால் பாக்கியா எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்று விடுகிறார். ஆனால் இந்த விஷயம் இனியாவிற்கு தெரிந்தால் நிச்சயம் பாக்யாவிற்கு சப்போர்ட் பண்ணும் விதமாக தான் முடிவு எடுப்பார். இன்னொரு பக்கம் ஆகாஷை எப்படியாவது கலெக்டர் ஆக்கி காட்ட வேண்டும் என்று முடிவு பண்ணிய செல்வி வீட்டில் இருக்கும் நகையை விற்று அதில் வரும் பணத்தை வைத்து ஆகாஷை கோச்சிங் கிளாஸில் சேர்த்து விடப் போகிறார்.
அப்படி போகும் பொழுது ஆகாஷிடம் நீயும் இனிய பாப்பாவும் காதலித்து இருந்தாலும் அதற்கு நம்முடைய தகுதி தராதரம் இடம் கொடுக்காததால் இனிய பாப்பாவுக்கு வேறு ஒரு இடத்தில் கல்யாணம் ஆகிவிட்டது. அந்த வகையில் இனிய பாப்பா எங்க இருந்தாலும் சந்தோசமாக இருக்கட்டும்.
இருந்தாலும் நம்மளை ஏளனமாக பார்த்த சிலருக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டும். அதற்கு நீ கலெக்டர் ஆகிய தீர வேண்டும் என பிடிவாதமாக சொல்லிவிட்டார். அந்த வகையில் நிச்சயம் ஆகாஷ் கலெக்டர் ஆகிவிடுவார். அதே நேரத்தில் இனியாவின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக போகிறது. அப்பொழுது செல்வி மற்றும் ஆகாஷ் தான் இனியாவின் வாழ்க்கையை மீட்டு எடுப்பார்கள்.