உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 இன்னும் சில மணி நேரங்களில் கோலாகலமாக துவங்க இருக்கிறது. மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த சில நாட்களாகவே இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோக்கள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோ ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டி உள்ளது. அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதற்கு முன்பு கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்த போட்டியாளர்கள் அனைவரும் மேடைக்கு வருகின்றனர்.
நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் இவர்களின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளிவந்த ப்ரோமோவில் பலரையும் கவர்ந்த ஒரே ஒரு விஷயம் நிரூப் தன் இரண்டு காதலிகளுடன் வந்ததுதான்.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் சர்ச்சை போட்டியாளராக இருந்தவர் தான் நிரூப். இவர் அபிராமி மற்றும் யாஷிகாவை காதலித்து பிரேக் அப் செய்துவிட்டார். இவர்கள் இருவரும் இதற்கு முந்தைய சீசனில் கலந்து கொண்ட பிரபலங்கள் தான். இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இவர்களின் காதல் விவகாரம் ஏற்கனவே பரபரப்பை கிளப்பிய நிலையில் இந்த மூவரும் இணைந்து பிக் பாஸ் மேடையில் ஒரு நடனம் ஆடுவார்களா என்ற ஆவலும் தற்போது எழுந்துள்ளது. இதற்காகவே இன்று மாலை நிகழ்ச்சியை காண பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளும் இந்த சீசனில் பொதுமக்களும் கலந்து கொள்ள இருப்பது பலருக்கும் தெரியும். அந்த வகையில் டிக் டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இன்னும் சில மணி நேரங்களில் துவங்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.