சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலை காப்பி அடித்த சேனல்.. முடிவுக்கு வரப்போகும் 2 சீரியல்

Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மக்களின் பேராதரவுடன் பட்டி தொட்டி எல்லாம் பறந்து வெற்றி பெற்றது. ஆனால் யார் கண் பட்டதோ எதிர்நீச்சல் சீரியலின் பில்லர் ஆக இருந்த குணசேகரன் என்கிற மாரிமுத்து மறைவிற்கு பிறகு நாடகம் மொத்தமாக தலைகீழாக மாறிவிட்டது.

எப்படி இருந்த சீரியல் இப்படி ஆகிவிட்டது என்று நொந்து கொள்ளும் அளவிற்கு கதை இருந்ததால் அவசர அவசரமாக எதிர்நீச்சல் சீரியலை முடித்து விட்டார்கள். இருந்தாலும் புது கதைகளத்துடன் மறுபடியும் எதிர்நீச்சல் தொடர்கிறது என்று இரண்டாம் பாகம் வந்த பொழுதும் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக தான் சீரியல் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில் எதிர்நீச்சல் சீரியல் மாதிரியே இன்னொரு கதை அப்படியே வரப் போகிறது. சன் டிவி விஜய் டிவிக்கு போட்டியாக இருக்கும் ஜீ தமிழ் சேனலில் புத்தம் புதுசாக சின்னஞ்சிறு கிளியே என்ற ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

ஆண் ஆதிக்க திமிருடன் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகளுக்கு இடையே பெண் என்றால் எதையும் சாதிக்க முடியும் என்று பறந்து வந்த கிளியை கூட்டுக்குள் அடைக்கும் விதமாக தாலி கட்டி வீட்டுக்குள் அடிமையாக வைக்கும் ஒரு கதை தான் சின்னஞ்சிறு கிளியே.

இதை ஏற்கனவே எதிர்நீச்சல் மூலம் பார்த்துவிட்டோம். அதற்கே இன்னும் விடை கிடைக்கவில்லை, அதற்குள் ஜீ தமிழிலும் ஆரம்பித்து விட்டதா என்று தோன்றும் அளவிற்கு எதிர்நீச்சல் சீரியல் கதை போலவே காப்பி அடித்து விட்டார்கள்.

தற்போது வாரிசு மற்றும் சின்னஞ்சிறு கிளி போன்ற இரண்டு சீரியல்கள் புதுசாக வர இருப்பதால் நினைத்தாலே இனிக்கும் மற்றும் இதயம் என்ற சீரியல் முடிவுக்கு வரப்போகிறது.