Serial: சின்னத்திரையில் சீரியலுக்கு பஞ்சமே இல்லை என்பதற்கு ஏற்ப காலையில் ஆரம்பித்து இரவு தூங்கும் வரை ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவும் காணாத என்று புதுசு புதுசாக சீரியலையும் கொண்டு வருகிறார்கள். அப்படி புது சீரியல் வரும் பொழுது ஏற்கனவே ஒளிபரப்பாகி வருகின்ற சில சீரியல்களின் நேரத்தை மாற்றி அதற்கு பதிலாக புது சீரியலை வைத்து விடுவார்கள்.
அப்படித்தான் ரொம்ப நாளாக ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு புது சீரியல் ஜூன் இரண்டாம் தேதி முதல் ஒளிபரப்பாக போகிறது. அதனால் இந்த ஒரு சீரியலின் நேரத்திற்காக மற்ற சீரியலின் நேரம் கொஞ்சம் குளறுபடியாக போகிறது. அதாவது ஜீ தமிழில் வரப்போகும் புது சீரியல் என்னவென்றால் அயலி. இந்த சீரியல் ஜூன் மாதம் இரண்டாம் தேதியில் இருந்து இரவு 8:30 மணிக்கு வரப்போகிறது.
அதனால் அன்னா சீரியலின் நேரம் மாற்றப்படுகிறது அதாவது தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள் அரை மணி நேரத்தில் இருந்து முக்கால் மணி நேரமாக கூட்டி இருக்கிறார்கள். அந்த வகையில் மாரி, வீரா கார்த்திகை தீபம் மற்றும் அண்ணா சீரியலும் அப்படித்தான் ஒளிபரப்பாகி வருகிறது.
அதனால் அயலி சீரியலை 8.30 மணிக்கு கொண்டு வந்து விட்டு கார்த்திகை தீபம் எப்பொழுதும் போல ஒன்பது மணிக்கு தான் ஒளிபரப்பு செய்யப் போகிறார்கள். அதனால் 9.30 மணிக்கு அண்ணா சீரியலையும், 10 மணிக்கு சந்தியாராகம் சீரியலையும் ஒளிபரப்பு செய்யப்போகிறார்கள்.