Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலா மனசில் எப்படியாவது இடம் பிடிக்க வேண்டும் என்று சோழன் தில்லாலங்கடி வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டார். வீட்டில் இருக்கும் நடேசனை தூண்டிவிட்டு கல்யாண போட்டோவை ஹாலில் மாட்டுவதற்கு சோழன் ஏற்பாடு பண்ணிவிட்டார்.
ஏனென்றால் கல்யாண போட்டோவை பார்க்கும் பொழுது நிலாவிற்கு ஒரு ஃபீலிங்ஸ் வரும். நம்முடைய வீட்டுக்காரர் சோழன் தான் என்ற ஒரு உணர்வு ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் நிலா இந்த வீட்டை விட்டு போகாமல் இருப்பார் என்ற நோக்கத்தில் சோழன், நடேசன் மூலம் காரியத்தை சாதித்து விட்டார்.
அதே மாதிரி எப்படியாவது விட்ட வேலையை தக்க வைத்துக் கொண்டு நிலாவுக்கு தேவையான விஷயத்தை செய்து நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பொறுப்பான கணவராகவும் மாறிவிட்டார். இப்படி நிலா மற்றும் சோழன் ஒருவகையில் ஜோடி சேர்ந்த பிறகு இன்னொரு பக்கம் சேரனுக்கு கார்த்திகா வரும் விதமாக தற்போது ஒரு பிரச்சனை ஆரம்பமாகிவிட்டது.
அதாவது கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும் என்பதற்கு ஏற்ப கார்த்திகாவின் அப்பா வெளிநாட்டில் இருந்து வந்ததும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டார். இது பிடிக்காத கார்த்திகா, சேரனை பார்த்து பீல் பண்ணி சொல்கிறார். இதனால் வரப்போகிற பிரச்சனையால் சேரன் மற்றும் கார்த்திகா ஒன்று சேரப் போகிறார்கள்.
இதனை அடுத்து மெக்கானிக்கல் வேலை பார்க்கும் பாண்டியனும் காதலிப்பதால் பாண்டியனுக்கு ஜோடி ஏற்கனவே கிடைத்துவிட்டது. தற்போது பல்லவனுக்கும் ஒரு ஜோடி இருக்கிறது என்பதற்கு ஏற்ப காலேஜில் புதுசாக ஒரு பொண்ணு என்டரி கொடுத்திருக்கிறது.
அந்த வகையில் பல்லவனுக்கு ஜோடியாக வருவது யார் என்றால் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிங்கபெண்ணே சீரியலில் முக்கியமான ஹீரோவாக நடிக்கும் அன்புவின் தங்கை யாழினி என்கிற திவ்யா விஜயகுமார் தான். இவர்தான் பல்லவனுக்கு ஜோடியாக என்டரி கொடுத்திருக்கிறார்.
அந்த வகையில் பெண்களே இல்லாமல் இருக்கும் அய்யனார் துணை குடும்பத்தில் நான்கு மருமகளும் ஒன்று சேர்ந்து வாழப் போகிறார்கள்.