அடுத்தவன் பொண்டாட்டியா இருந்தாலும் பரவாயில்ல.. எழில் தலையில் இடியை இறக்கிய சம்பவம்

Baakiyalakshmi Serial: விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் எதிர்பாராத திருப்பங்களுடன் காட்சிகள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் ஒரு புறம் ஜெனிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. ஆனாலும் செழியன் உடன் வேலை பார்க்கும் மாலினி அவரை டார்ச்சர் செய்து வருகிறார்.

அதாவது தன்னுடன் தான் செழியன் நேரத்தை செலவிட வேண்டும் என்று சூழ்ச்சி செய்து வருகிறார். செழியனும் வேறு வழியில்லாமல் மாலினி பேச்சுக்கு தலையாட்டி வருகிறார். மற்றொருபுறம் இத்தனை நாள் இறந்ததாக நினைத்துக் கொண்டிருந்த அமிர்தாவின் கணவர் கணேஷ் உயிருடன் வந்து விட்டார்.

அமிர்தாவை தேடி சென்னைக்கு வந்த நிலையில் இப்போது அவரது வீட்டு விலாசமும் கிடைத்துவிட்டது. நேரடியாகவே அமிர்தா மற்றும் தனது மகள் நிலாவை அழைத்துச் செல்ல கணேஷ் செல்கிறார். அந்தச் சமயத்தில் அமிர்தா தனது மகளுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்கிறார். இந்நிலையில் கணேஷ் வீட்டின் வாசல் வரை வந்த நிலையில் அங்கு எழில் அமிர்தா திருமண புகைப்படத்தை பார்த்து விடுகிறார்.

இதனால் நிலைகுலைந்து போன கணேஷ் வீட்டுக்குள் போகாமல் அப்படியே வெளியே வந்து விடுகிறார். அதோடு மட்டுமல்லாமல் உடனடியாகவே தனது அம்மா அப்பாவுக்கு போன் செய்து அமிர்தாவுக்கு வேறு ஒரு திருமணம் நடந்த உண்மையை தெரிந்து கொண்டதாக கூறுகிறார். அதோடு மட்டுமல்லாமல் அமிர்தா மற்றும் தன்னுடைய குழந்தையை அழைத்து வர போவதாகவும் சொல்கிறார்.

இப்போது அமிர்தா எழிலின் பொண்டாட்டியாக இருந்தாலும் பரவாயில்லை என்று கணேஷ் விபரீத முடிவு எடுக்க இருக்கிறார். ஆனால் அமிர்தா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது வரும் வாரங்களில் தெரியவரும். நிலாவின் உண்மையான தந்தை கணேஷ் என்பதால் எழில் இந்த விஷயத்தை பற்றி யோசிக்க கண்டிப்பாக வாய்ப்பு இருக்கிறது.

எப்போதுமே விட்டுக் கொடுக்கும் குணம் உடைய எழில் தனது பொண்டாட்டியையும் கணேஷுக்கு விட்டுக் கொடுக்க துணிய மாட்டார். மேலும் இதனால் பாக்கியலட்சுமி வீட்டில் பிரளயமே வெடிக்க இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் தன் தலையில் தானே எழில் மண்ணை வாரி போட்டுக் கொண்டார் என அவரது பாட்டி ஈஸ்வரி புலம்ப போகிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →