நிலா சோழன் பிரிந்ததால் ஏற்பட போகும் குதூகலம்.. பத்த வச்ச நடேசன்

Ayyanar Thunai serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், சோழன் நிலாவிடம் தவறாக நடந்து கொண்டதால் நிலாவுக்கு அந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. அதனால் ஆபீஸில் இருக்கும் தோழியிடம் சொல்லி தங்குவதற்கு ஹாஸ்டல் கேட்டார். உடனே அந்தத் தோழி நான் தங்கும் ஹாஸ்டலில் தங்க முடியுமா என கேட்டு பார்க்கலாம் என்று நிலவை கூட்டிட்டு போய் விசாரிக்கிறார்.

அதன் படி நிலாவுக்கு அங்க தங்குவதற்கு எல்லா அனுமதியும் கிடைத்து விட்டது. உடனே இந்த விஷயத்தை சேரனிடம் சொல்ல வேண்டும் என்று சேரன் வேலை பார்க்கும் இடத்திற்கு போகிறார். அங்கே போனதும் இவ்வளவு தூரம் நடந்த பிறகு நான் அந்த வீட்டில் தங்கினால் நன்றாக இருக்காது. அதனால் வெளியே தங்கிக் கொள்வதற்கு ஒரு ஹாஸ்டலை பார்த்து விட்டேன். இன்றே அங்கே போகிறேன் என்று சொல்கிறார்.

உடனே சேரன் முடிவு பண்ணி விட்டாயா என்று கேட்கிறார், அதற்கு நிலா ஆமாம் என்று சொல்லிய நிலையில் வீட்டிற்கு இருவரும் வருகிறார்கள். வந்ததும் பல்லவன் இடம் விஷயத்தை சொல்லி நிலா கிளம்புவதற்கு தயாராகி விட்டார். இது தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்த பாண்டியன் மற்றும் சோழனிடம் பல்லவன் சொல்லி பீல் பண்ணி அழுகிறார்.

அப்பொழுது நிலா கிளம்பி சோழனை கூட்டிட்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறார். நிலாவின் பிரிவை தாங்க முடியாமல் மொத்த குடும்பமும் பீல் பண்ணுகிறார்கள். அடுத்ததாக சேரன் ஹாஸ்டலுக்கு சென்று நிலாவை விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விடுகிறார். உடனே சோழன், நிலவின் ஹாஸ்டலுக்கு சென்று நிலாவிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் நிலா மன்னிப்பதாக தெரியவில்லை.

இருந்தாலும் சோழன் செஞ்சுத் தவருக்கு தொடர்ந்து நிலவிடம் மன்னிப்பு கேட்டு நிலா மனசில் இடம் பிடித்து விடுவார். நிலாவுக்கும் அய்யனார் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க மனம் வராது. அதனால் நிச்சயம் மறுபடியும் சோழன் வீட்டிற்கு வந்து விடுவார். இதற்கிடையில் சோழன் மனதில் பல விஷயங்களை சொல்லி பத்த வச்ச நடேசன் மூலம் பல திருப்பங்கள் வரப்போகிறது. அந்த வகையில் இனிதான் நிலா மற்றும் சோழனின் ரணகளம் குதூகலமாக மாறப்போகிறது.