மகாநதி சீரியலில் காவிரியை உதாசீனப்படுத்தும் குடும்பம்.. விஜயை பற்றி குழந்தை இடம் பெருமையாக பேசும் VIKA

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், ஒரே வீட்டில் கங்கா மற்றும் காவிரி கர்ப்பமாக இருந்தாலும் காவிரியின் கர்ப்பம் பற்றி வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாததால் கங்காவை மட்டும் அனைவரும் தூக்கிக் கொண்டாடுகிறார்கள். அதிலும் கங்காவுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்பதற்காக காவேரியை எல்லா வேலையும் செய்ய வைக்கிறார்கள்.

காவிரியும் எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலையில் இருப்பதால் கங்காவுக்கு பணிவிடை பார்ப்பது வீட்டில் உள்ள வேலைகளை பார்ப்பது போன்ற அனைத்து எடுபிடி வேலைகளையும் பார்த்து வருகிறார். இதையெல்லாம் பார்த்த நவீன், காவேரி கிட்ட விஜய் இடம் நீ உண்மையை சொன்னால் மட்டும்தான் நீயும் குழந்தையும் நிம்மதியாக இருக்க முடியும்.

அட்லீஸ்ட் விஜய் இடம் ஆவது உண்மையை சொல்லு என்று அட்வைஸ் பண்ணுகிறார். ஆனால் காவேரி பிடிவாதமாக வெண்ணிலா பிரச்சினை முடிவுக்கு வந்தால் தான் நான் கர்ப்பம் என்ற விஷயத்தை விஜய் இடம் சொல்வேன் என்று தீர்மானமாக இருக்கிறார். அத்துடன் கங்காவை எல்லோரும் தாங்கும் பொழுது காவிரியை உதாசீனப்படுத்தும் விதமாக குடும்பத்தில் இருப்பவர்கள் நடந்து கொள்கிறார்கள்.

அதாவது கங்கா கர்ப்பமாக இருக்கிறார் என்பதால் குங்குமப்பூ போட்டு பால் குடித்தால் குழந்தை நன்றாக இருக்கும் என்பதால் காவேரியை விட்டு பாலில் குங்குமப்பூ சேர்த்து கொடுக்க சொல்கிறார். உடனே காவிரியும் கங்காக்கு கொடுக்கும் பொழுது அவருக்கும் ஒரு டம்ளரில் சேர்த்து விடுகிறார். இதனைப் பார்த்த குமரனின் அம்மா உனக்கும் ஆசை வந்து விட்டதா என்று கேட்டதும் காவேரி ஆமாம் என்று ஆசைடன் தலையாட்டி விடுகிறார்.

அதற்கு குமரன் அம்மா, அப்படி என்றால் நீ விஜயுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று சொல்கிறார். இதனால் காயப்பட்ட காவேரி, யாருக்கும் தெரியாமல் குழந்தையிடம் விஜய் பற்றி சொல்லும் விதமாக பாப்பா, வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் உன்னுடைய பெரியம்மாவை தான் நல்லபடியாக கவனித்துக் கொள்கிறார்கள். ஆனால் உங்க அப்பாக்கு மட்டும் விஷயம் தெரிந்தால் கிலோ கணக்கில் குங்குமப்பூ கொண்டு வந்து கொடுப்பாங்க.

அத்துடன் இன்னும் கூடிய சீக்கிரத்தில் நீ நான் அப்பா மூன்று பேரும் ஒரே வீட்டில் சந்தோசமாக இருப்போம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்ற சந்தோஷத்தை குழந்தையிடம் சொல்லி காவேரி தனியாக பீல் பண்ணி பேசுகிறார். அந்த வகையில் விஜய், வெண்ணிலா பிரச்சனைக்கு முடிவு கட்டி காவேரியுடன் சேர்ந்து விடுவார்.