முடிவுக்கு வரப் போகும் ஃபேவரிட் சீரியல்.. வினோதினி சீரியலை புதுசா கொண்டு வந்த சன் டிவி

Sun Tv: சன் டிவி சேனலில் கிட்டத்தட்ட 18 சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மதியம் மற்றும் சாயங்காலம் என பாதியாக பிரிக்கப்பட்டு சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் மாலை 6:00 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு மட்டுமே அதிக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். ஏனென்றால் பகல் முழுவதும் வேலை பார்த்துட்டு சாயங்காலம் மட்டும்தான் ஓய்வெடுக்கும் பொழுது அவர்களால் சீரியலை பார்க்க முடிகிறது.

அதனால் தான் டிஆர்பி ரேட்டிங்கில் சாயங்காலம் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அதிகமான புள்ளிகளை பெற்று வருகிறது. ஆனால் இதற்கு இடையில் பகலில் ஒளிபரப்பாகும் ஒரு சில சீரியல்களும் மக்களின் பேவரைட் சீரியலாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட ஒரு சீரியல் தான் முடிவுக்கு வரப்போகிறது.

அதாவது கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஒளிபரப்பான லட்சுமி சீரியல் இப்பொழுது வரை 300 எபிசோடுக்கு மேல் ஒளிபரப்பாகி மக்கள் மனதை கவர்ந்து வருகிறது. ஆனாலும் சில காரணங்கள் அந்த சீரியலை தொடர்ந்து கொண்டு போக முடியவில்லை என்பதால் கிளைமேக்ஸ் காட்சிகளை அவசர அவசரமாக எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் இன்னும் ஒரு சில வாரங்களில் லட்சுமி சீரியலை முடித்துவிட்டு அதற்கு பதிலாக வினோதினி சீரியலை கொண்டு வரப் போகிறார்கள். அதனால் தான் நேற்று சன் டிவியில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வினோதினி சீரியலின் ப்ரோமோ வெளிவந்தது.

இந்த சீரியலின் கதை என்னவென்றால் புகுந்த வீட்டில் பொறுப்பான மருமகளாகவும் பிள்ளைகளுக்கு சிறந்த அம்மாவாகவும் பயணித்து வரும் வினோதினிக்கு தனிப்பட்ட கவலை என்னவென்றால் வெளிநாட்டிற்கு சென்ற கணவர் 10 வருடங்கள் ஆகியும் வரவில்லை என்பதால் ஏக்கத்துடன் காத்திருக்கும் ஒரு இல்லத்தரசியின் கண்ணீர் கதையாக தான் இருக்கப் போகிறது.

இந்த சீரியலின் ப்ரோமோவை பார்த்த மக்கள் கதை ரொம்பவே வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கிறது என்று கமெண்ட் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். மேலும் இதில் வினோதினி கேரக்டரில் கார்த்திகை தீபம் சீரியலில் தீபா கேரக்டரில் நடித்த ஆர்த்திகா வருகிறார். இவருக்கு ஜோடியாக சின்னத்திரை கதாநாயகன் கிருஷ்ணா கமிட் ஆகி இருக்கிறார்.

என்னதான் புகுந்த வீட்டில் இருப்பவர்களை சந்தோஷமாக வினோதினி பார்த்துக் கொண்டாலும் மகன் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு அம்மாவின் சோகம். அந்த வகையில் இந்த சீரியல் நிச்சயம் மக்கள் மனதில் நிலையான ஒரு இடத்தை பிடித்து விடும்.