விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஏதோ ஒரு கோபத்தில் தான் மீனாவை வீட்டிற்கு வரக்கூடாது என்றும் முத்து சொன்னார். ஆனால் சொன்ன மறு நிமிசத்தில் இருந்து மீனாவை மறக்க முடியாமல் மீனா ஞாபகத்திலேயே முத்து இருக்கிறார்.
அந்த வகையில் இரண்டு பேரும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது கூட கோபப்படாமல் மீனாவை பிரிந்து ஏக்கத்துடன் இருப்பது போல் தான் முத்து, மீனாவை பார்த்து கொண்டார். அடுத்ததாக ரோகினி மனோஜ் ஷோரூம் இல் இருக்கும் பொழுது வேலை கேட்டு கணவன் மனைவிகள் இரண்டு பேரும் வந்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு போக இடமில்லை என்பதால் ஷோரூமில் தங்குவதற்கும் உதவி கேட்கிறார்கள். மனைவியும் வேறு எங்கேயும் வேலைக்கு போக முடியாது என்பதால் ஒருத்தருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை எங்கள் இரண்டு பேருக்கும் கொடுத்தால் போதும் என்று சொல்கிறார்கள்.
இவர்கள் சொல்லுவதை நம்பிய மனோஜ் ரோகினி அந்த தம்பதிகளுக்கு வேலை கொடுத்து விடுகிறார்கள். அதிலும் ரோகிணி, வீட்டில் மீனா இல்லாததால் எல்லா வேலையும் நான் பார்க்கும்படி இருக்கிறது. அதனால் இவங்களை அங்கே கூட்டிட்டு போயி சமைக்க சொல்லலாம் என்று மனோஜிடம் ஐடியா கொடுக்கிறார்.
அதன்படி அந்த ராணி என்பவரை வீட்டு வேலைக்காக ரோகிணி மனோஜ் கூட்டிட்டு போகிறார். அப்படி போனதும் சுருதி கேட்டபடி பொங்கல் போடுவதற்கு தயாராகி விட்டார். ஆனால் சமையல் எதுவும் நல்லா இல்லாமல் காரமாக இருந்ததால் விஜயா இனி அந்த ராணியை வீட்டு பக்கம் சேர்க்க கூடாது என்று சொல்லிவிடுகிறார்.
ஆனால் இந்த ராஜா ராணிக்கு பின்னாடி பிளாக் மெயில் பண்ணும் தினேஷ் என்பவர் இருப்பதாக தெரிகிறது. ரோகிணி மனோஜை ஈசியாக ஏமாற்றலாம் என்பதற்கு ஏற்ற மாதிரி இவர்களை அனுப்பி வைத்து ஷோரூமில் இருக்கும் அனைத்து பொருட்களையும் திருடுவதற்கு போட்ட பிளான் ஆக தெரிகிறது. இவர்களிடம் ஏமாந்து ரோகிணி மனோஜ் நடுத்தெருவில் நிற்கப் போகிறார்கள்.
இதில் முத்து செஞ்ச உருப்படியான விஷயம் மீனாவை வீட்டை விட்டு அனுப்பியதுதான். வீட்டு வேலைக்காரி போலதான் இத்தனை நாள் மீனா அங்கே வேலை பார்த்தார். அந்த வகையில் மீனாவுக்கு இனி ரெஸ்ட் என்பதற்கு ஏற்ப அம்மா வீட்டில் நிம்மதியாக இருக்கிறார். மீனாவை திட்டிக் கொண்டிருக்கும் விஜயா வாய்க்கு ருசியாக சாப்பிட முடியாமல் அவஸ்தை பட்டு வருகிறார்.