Vijay Tv Serial: சீரியல்களில் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி விட்டால் ஒவ்வொரு கலைஞருக்கும் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை. அந்த வகையில் எத்தனையோ கலைஞர்கள் சின்னத்திரை மூலம் கலக்கிக் கொண்டு வருகிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு பிளாட்பார்ம் தான் சீரியல். அதனால் இந்த சீரியலில் நம்பி எத்தனையோ கலைஞர்கள் புதுசாக வந்து கொண்டே இருக்கிறார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர் நடிப்பின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். அதனால் அடுத்தடுத்து இரண்டு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த இரண்டு சீரியல்களிலும் தற்போது நடிக்க முடியாமல் ஆகிவிட்டது.
அதாவது அந்த கதாநாயகன் யார் என்றால் சங்கரேஸ் குமார். இவர் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த கோகுலத்தில் சீதை என்ற சீரியல் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீ தான் காதல் சீரியலில் இரண்டாவது ஹீரோவாக ஆகாஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவருக்கு ஜோடியாக நடித்து வரும் அணு மற்றும் ஆகாஷின் ஜோடி மக்களை அதிக அளவில் கவர்ந்தது.
இதன் மூலம் பிரபலமான சங்கரேஸ் குமார் ஜீ தமிழில் மறுபடியும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் புதிதாக தொடங்கப்பட்ட கெட்டி மேளம் என்ற சீரியலில் அஞ்சலியை ஒரு தலைப்பட்சமாக காதலிக்கும் கவின் கேரக்டரில் நடித்து வந்தார். இதிலேயும் இவர் கேரக்டர் மக்களை கவர்ந்த நிலையில் திடீரென்று வந்த ப்ரோமோவில் இவருக்கு பதிலாக வேறு ஒருவர் வந்து விடுகிறார்.
அதன் மூலம் இவர் கெட்டி மேளம் சீரியலில் தொடர்ந்து நடிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது. அத்துடன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஃபேவரிட் சீரியல்களில் ஒன்று நீ நான் காதல். இந்த சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வருவதால் இதிலும் இவருடைய கதாபாத்திரத்தை அடுத்து பார்க்க முடியாது. இப்படி ஒரே நேரத்தில் இரண்டு சீரியலும் நடிக்க முடியாமல் போய்விட்டது.