Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், நடந்த இரண்டு வாரங்களாக கதைகள் விறுவிறுப்பாகவும் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாகவும் இருப்பதால் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்று முன்னேறிக் கொண்டே வருகிறது. இதை இன்னும் மெருகேற்றும் வகையில் கோலங்கள் சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஆதி என்கிற அஜய் என்பவர் கமிட்டாக போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது.
இதனைத் தொடர்ந்து இன்னொரு விஷயம் வெளிவந்தது என்னவென்றால் எதிர்நீச்சல் 2 சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் சக்தி கதாபாத்திரம் விலகப்போவதாக தெரிகிறது. முதல் பாகத்திலும் சரி இப்பொழுதும் சரி சக்திக்கு பெருசாக கேரக்டர் அமையவில்லை. வீரமான பேச்சும், ரொமான்ஸ்சும் இல்லாமல் இங்கேயும் அங்கேயும் தாவிக் கொண்டு இருப்பதால் இவருடைய கேரக்டரை நெட்டிஷன்கள் கிண்டல் பண்ணும் அளவிற்கு இணையத்தில் பரவி வருகிறது.
இதனால் இதிலிருந்து விலகுவதற்கு சக்தி தயாராகி விட்டார். இன்னும் ஒரு சில நாட்களில் சக்தி கேரக்டருக்கு பதிலாக வேறு ஒருவர் வருவதாக தகவல் வெளியாயிருக்கிறது. மேலும் அறிவுக்கரசி மற்றும் குணசேகரன் கும்பலை ஓட ஓட விரட்டும் விதமாக ஜனனி, சிங்க பெண்ணாக களம் இறங்கி இருக்கிறார். இதோடு விடாமல் பார்கவி வைத்து பதிலடி கொடுக்க வேண்டும் என்று தர்ஷன் மற்றும் பார்கவிக்கு கல்யாணம் பண்ணுவதற்கு ஜீவானந்தம் மூலம் காய் நகர்த்தி வருகிறார்.
இந்த முறை குறி தப்பாது என்று சொல்வதற்கு ஏற்ப ஜீவானந்தம் உடன் கூட்டணி போடும் பெண்களுக்கு வெற்றி நிச்சயம். பார்கவி தர்ஷன் கல்யாணம் நடந்ததையொட்டி குணசேகரன் கும்பலுக்கும் சின்ன பிள்ளையாக அடாவடித்தனம் பண்ணும் அன்புக்கரிசிக்கும் மிகப்பெரிய தோல்வியாக இருக்கப்போகிறது. இன்னும் அடுத்த சில வாரங்களில் எதிர்நீச்சல் 2 சீரியல் முதல் இடத்திற்கு வந்து விடும்.