15 வருஷமாக விஜய் டிவி நிகழ்ச்சிகளை தூக்கி நிறுத்தும் தொகுப்பாளர்.. பிரியங்கா உடன் வைத்த கூட்டணி

Vijay Tv: நிகழ்ச்சிகள் என்றால் அது விஜய் டிவி தான் என்று சொல்வதற்கு ஏற்ப ரியாலிட்டி ஷோ மூலம் மக்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களுடைய வாழ்க்கையே உயர்த்திய சேனல் என்றால் அது விஜய் டிவி தான். அதனால் தான் விஜய் டிவியில் ஏதாவது ஒரு சான்ஸ் கிடைத்தாலும் போதும் அதன் மூலம் முன்னேறி விடலாம் என்று பலரும் விடாமுயற்சியுடன் போராடி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவி சேனல் மக்களிடம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் தான். இதில் எப்பொழுதுமே நமக்கு ஞாபகம் வருவது டிடி, கோபிநாத், பாவனா, ரம்யா போன்ற தொகுப்பாளர்கள் தான். ஆனால் இவர்களை எல்லாம் ஓவர் டேக் பண்ணும் விதமாக பிரியங்கா உள்ளே வந்ததுக்கு பிறகு முக்கால்வாசி நிகழ்ச்சிகளை எல்லாம் இவர்தான் தொகுத்து வழங்கி வந்தார்.

அப்படிப்பட்ட இவருடன் கூட்டணி போட்டு பல வெற்றி நிகழ்ச்சிகளை கொடுத்தவர் தான் தொகுப்பாளர் மாகாபா. இவர் முதலில் ஆர்ஜேவாக இருந்த பின் அது எது எது என்ற நிகழ்ச்சியை சிவகார்த்திகேயனுக்கு அடுத்ததாக தொகுத்து வழங்கி வந்தார். இந்த வெற்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதுடன் அடுத்தடுத்து சினிமா காரம் காபி, சூப்பர் சிங்கர் ஜூனியர் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

இப்படி 20 நிகழ்ச்சிக்கும் மேல் தொகுத்து வழங்கியிருக்கிறார். எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்துட்டு போனாலும் இப்பொழுது வரை நிரந்தரமாக இருக்கக்கூடிய ஆண் தொகுப்பாளர் மாகாபா மட்டுமே. அதற்கு காரணம் பிரியங்கா வந்தவுடன் சேர்ந்து கூட்டணி போட்டு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை அனைவரையும் பார்க்கும் படியாக என்டர்டைன்மெண்டாக கொண்டு வந்தார்.

இதற்கு கிடைத்த வரவேற்பின் மூலம் பிரியங்கா மற்றும் மாகாபா காம்போ ஹிட் ஆகிறது. அந்த வகையில் மாகாபாவின் ஒரு எபிசோடு காண சம்பளம் என்னவென்றால் இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம். இதனால் தான் வேற எந்த சேனலுக்கு போகாமல் கிட்டதட்ட 15 வருஷமாக விஜய் டிவியில் மட்டுமே பயணத்து வருகிறார்.