Serial TRP Rating List: சின்னத்திரை பொருத்தவரை சீரியல்கள் தான் டிஆர்பி ரேட்டிங்கின் சிம்மாசனமாக இருக்கும். இந்த டிஆர்பி ரேட்டிங்கே பொறுத்துதான் எந்த சீரியல்கள் மக்கள் மனதை கவர்ந்து வருகிறது என்பதை நிர்ணயிக்க முடியும். அந்த வகையில் காலம் காலமாக சன் டிவி சீரியல்கள் தான் அதிக புள்ளிகளை பெறும்.
ஆனால் சமீப காலமாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்களை டென்ஷன் படுத்தும் விதமாகவும், அரைச்ச மாவை அரைக்கும் விதமாக போரிங்காக போய்க்கொண்டிருக்கிறது. அதிலும் பிரைம் டைமிங்கில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் டாப் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதிக புள்ளிகள் பெறும்.
ஆனால் தற்போது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது என்பதற்கு ஏற்ப சில வாரங்களாக கம்மியான புள்ளிகளை பெற்று சன் டிவியில் வரும் சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் அடிவாங்கி வருகிறது. அதாவது ஒரு நேரத்தில் 12 புள்ளிகள் 13 புள்ளிகள் என டிஆர்பி ரேட்டிங்கை பெற்றது.
ஆனால் இப்பொழுது ஒன்பது புள்ளிகளை பெறுவதே மிகப்பெரிய குதிரை கும்பாகத்தான் இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் வெளிவந்த டிஆர்பி ரேட்டிங் இன் படி சிங்க பெண்ணே சீரியல் 9.55 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்திலும், 8.85 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் மூன்று முடிச்சு சீரியல், மூன்றாவது இடத்தில் 8.73 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
அடுத்ததாக 7.85 புள்ளிகளை பெற்று மருமகள் சீரியல் நான்காவது இடத்திலும், 7.45 புள்ளிகளை பெற்று அன்னம் சீரியல் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இப்படி முதல் ஐந்து இடத்தை சன் டிவி சீரியல்கள் பிடித்திருந்தாலும் புள்ளிகளை கம்மியாக பெற்று வருவதால் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள் அடுத்தடுத்து முன்னேறி போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.