மகாநதி சீரியலில் வீட்டை காலி பண்ணும் காவேரி குடும்பம்.. பரிதாபமாக நிற்கும் விஜய், சேர்த்து வைக்கப் போகும் நவீன்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காதலை சொல்ல வரும் தருணத்தில் இப்படி ஒரு மோசமான நிலைமையில் விஜய் மாட்டிக் கொண்டார். காவேரிக்கு சர்ப்ரைஸ் கொடுத்து தன் காதலை சொல்லி தனக்கு எஜமானியாகவும் தேவதையாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசைப்பட்ட விஜய்க்கு எல்லாம் ஏமாற்றமாகவே போய்விட்டது.

யமுனா சொன்ன ஒப்பந்த கல்யாணத்தை தெரிந்து கொண்ட குடும்பம், விஜய் இடம் நியாயம் கேட்டு விட்டார்கள். அப்பொழுது நர்மதாவின் ஆபரேஷனுக்காக ஒரு வருட ஒப்பந்த கல்யாணம் பண்ண சொல்லி விஜய் கேட்டார். எனக்கும் அந்த நேரத்தில் வேறு வழி தெரியாததால் கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டேன் என்று சொல்லிய நிலையில் காவிரியின் குடும்பம் காவிரியை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அப்பொழுது காவிரி அடி வாங்குவதை பார்க்க முடியாத விஜய் தடுப்பதற்கு முயற்சி எடுக்கிறார். உடனே எல்லாத்துக்கும் காரணம் நீ தான் என்று குமரன் விஜயை அடித்துவிட்டார். அப்பொழுது அங்க பெரிய பிரச்சினை ஆரம்பித்த நேரத்தில் ராகினி பசுபதி எல்லோரும் வந்து விட்டார்கள். சும்மாவே ராகினி பசுபதி ருத்ர தாண்டவம் ஆடுவார்கள்.

இப்பொழுது அவர்களுக்கு ஒரு விஷயம் கொத்தாக கிடைத்திருக்கிறது என்றால் சும்மாவா விட்டு வைப்பாங்க. இதுதான் சான்ஸ் என்று காவிரியையும் காவேரி குடும்பத்தையும் வாய்க்கு வந்தபடி திட்டி அவமானப்படுத்தி பேச ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு எதுவும் பதிலடி கொடுக்க முடியாத சூழ்நிலையில் காவிரி குடும்பம் இருந்ததால் எல்லா பேச்சுக்களையும் வாங்கிக் கொண்டார்கள்.

ஆனாலும் பசுபதி மூக்கை நுழைத்து அவமானப்படுத்தி பேசியதால் அங்கு கைகலப்பு ஆகிவிட்டது. பிறகு அந்த இடத்தில் காவிரி குடும்பம் அவமானப்பட்டதோடு இனி இந்த மாதிரி ஆளு உனக்கு தேவையே இல்லை என்று விஜய்யிடமிருந்து காவிரியை பிரித்து கூட்டிப் போய் விட்டார்கள். இந்த தருணத்தில் என்ன சொல்வது என்ன பண்ணுவது என்று தெரியாமல் விஜய்யும் அழ ஆரம்பித்து விட்டார்.

ஆனால் இதற்கு அப்புறமும் இந்த வீட்டில் இங்கே இருக்க வேண்டாம் என்று முடிவு பண்ணி வீட்டை விட்டு போவதற்கு காவிரி குடும்பம் தயாராகி விடுவார்கள். இவர்கள் போகவில்லை என்றாலும் ராகினி உசுப்பேத்தியே இந்த குடும்பத்தை காலி பண்ண வைத்து விடுவார். எல்லாமே கைமீறி போய்விட்டதே என்று பரிதாபத்தில் விஜய் நிற்கிறார்.

இந்த ரணகளத்தில் குளிர் காயும் விதமாக ராகினி மற்றும் பசுபதி, வெண்ணிலாவே வைத்து ஏதாவது டிராமா போட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த பிரச்சனை எல்லாம் சரி செய்யும் விதமாக நவீன் வந்து விஜய் இடம் பேசி காவிரி மற்றும் விஜயை ஒன்று சேர்த்து வைக்கப் போகிறார்.

Leave a Comment