பல்லவனை கண்டுபிடித்த நிலா ? சந்தோஷத்தில் அய்யனார் துணை குடும்பம்

Ayyanar Thunai serial : விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில், பழைய போட்டோக்களை எல்லாம் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சேரன், சோழன், பாண்டியன் மூவரும் ஒரே போட்டோவில் அம்மாவுடன் இருந்துள்ளனர். ஆனால் பல்லவன் மட்டும் தனியாக இன்னொரு போட்டோவில் வேறு ஒரு பெண்ணுடன் இருந்துள்ளார்.

இதை பார்த்து கோபம் அடைந்த பல்லவன், அண்ணன்கள் மட்டும் அம்மாவுடன் இருக்கின்றார்கள் நான் மட்டும் தனியே ஏன் இந்த பெண்ணுடன் இருக்கிறேன் என கேட்கிறான்.

அதற்கு பொறுமை தாங்க முடியாமல் பதில் அளித்தார் இவர்களின் அப்பா. நீ உன் அம்மா கூட தான் இருக்கிறாய் என்று கூறியவுடன் பல்லவனுக்கு, தான் இரண்டாவது மனைவியின் மகன் என்பது புரிய வந்தது.

இதை ஏற்றுக் கொள்ள முடியாத பல்லவன் கதறி அழுது கொண்டு அண்ணன்களிடம் கேட்கிறான். அண்ணன்களும் மறுக்க முடியாமல் உண்மையை கூறுகின்றனர். அதைக் கேட்டவுடன் நிலா மற்றும் பல்லவனுக்கு அதிர்ச்சியாக உள்ளது. அண்ணன்கள் எவ்வளவு தான் சமாதானம் கூறியும் பல்லவன் புரிந்து கொண்டவாறு தெரியவில்லை.

பிறகு சற்று நேரம் கழித்து வீட்டில் இருந்த பல்லவனை காணவில்லை. பிறகு ஆளுக்கு ஒரு பக்கம் தேடியும் பல்லவன் கிடைக்கவில்லை. இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் சேரன், சோழன், பாண்டியன் மூவரும் மனம் நொந்து போகின்றனர்.

ஆனால் நிலாவோ பதற்றத்துடன், சற்று பொறுமையாக யோசித்து முன்பு ஒருநாள் நிலாவும் பல்லவனும் பேசிக் கொண்டிருக்கையில், மனதுக்கு கஷ்டமாக இருந்தால் நான் ECR சென்று சென்று விடுவேன் என கூறி இருக்கிறான்.

பல்லவனை கண்டுபிடித்த நிலா

இதை யோசித்துப் பார்த்து நிலா பல்லவனை ECR அருகில் சென்று தேடுகிறாள். அங்கு பல்லவன் இருப்பதை பார்த்து பல்லவனை வீட்டிற்கு அழைத்து வருகிறாள். அண்ணன்கள் மூவரும் பல்லவனை கட்டி அனைத்து கதறி அழுகின்றனர்.

அப்போது சோழன் ஆரம்பத்தில் எங்களுக்கு பல்லவனை பிடிக்கவில்லை என்றும் பிறகு அம்மா சென்ற சோகத்தில் இருந்த எங்களுக்கு பல்லவன் தான் ஆறுதல். அவனும் எங்களிடம் ஒட்டிக் கொண்டான்.

எங்களுக்கு பல்லவன் தான் உயிர் என்றும் கூறுகிறான். இவ்வாறு அய்யனார் துணை குடும்பம் மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அய்யனார் துணை சீரியலின் இயக்குனர் ஒவ்வொரு எபிசோடுகளிலும் ஸ்கோர் அடித்துக் கொண்டே செல்கிறார். அதனால் இன்று அனைவராலும் ரசிக்கப்படும் சீரியலில் அய்யனார் துணை சீரியலும் உள்ளது என கூறலாம்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →